பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 நாச்சியப்பன் பேருந்தில் மகளிர் வண்டி புகுகிறது. ஆணின் வீழ்ச்சி காதல்" மலர்ச்சியாக மாறும்போது இனிய பாதியின் வடிவம் மெள்ள வெளிப்படுகிறது. ஆயினும் இனியபாதியின் பின்னர் இன்னமை விளங்குகிறது. மாறுவேடம் போன்ற சிறுசிறு கலை நுணுக்கங்கள் பாரதிதாசனின் வீரத்தா யாய் கழைக் கூத்தியின் காதலாய், அண்ணுவின் வேலைக்காரியாய், கலைஞரின் ரோமாபுரிப் பாண்டிய'ய்ை வெளிப்படுகின்றன. இம் மாறு வேட வளர்ச்சி பின்னர் அமைந்துள்ள இளவரசி முல்லை'யிலும் தாமரைப் பெண்ணுள் வணிகனக மாறும் மாற்றமாக மலர்கிறது. கவிதை நெறியில் ஒர் இயக்கம் ஊட்டும் ஆற்றல் இது என்பதை இதல்ை நன்கு அறிய முடிகிறது. பொருளாதாரப் புயல் காதல் நெறியிலே பழமையைப் புதுமை வளர்ச்சியில் சுழலவிட்ட கவிஞர், குடும்பச் சூழலில் பொருளாதாரம் புயலாக மாறிச் சிக்கல்களை உண்டாக்கு வதையும் மறக்கவில்லை. குடும்ப விளக்காகக் குடும்பத்தின் அமைதி அழகைப் பாரதிதாசன் காட்டும் போதே அறிவின்மையால் அக்குடும்பம் "இருண்ட வீடாக இலகுவதைக் காட்டினர். அந்நிலை குடும்பமும் குடும்பத்தில் வாழும் உறுப்பினர்களும் கொண்ட உறவு நிலையை ஒட்டியது. ஆனல் வளர்ந்து வரும் சமுதாயத்தில் பொருளாதாரச் சூழல்கள் குடும்பத்தின் உருவத்தைக் குலைக்கிறது. தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் செம்மை நெறி மாறி முதலாளிகளின் ஆசை வலையில் சிக்கித் தவருன வழியில் தொழிலாளர்களை நடத்திச் செல்லும்போது குடும்பம் சீர்குலைகிறது. அப்போது நல் வாழ்வு காண அறிஞர் வழி முன்னேற்றச் சங்கம்’ அமைப்பதைக் கவிஞர் காட்டுகின்ருர். - இன்றைய சூழலில் தொழிலாளர்களிடையே தோன்றி யுள்ள பல முன்னேற்ற சங்கங்களின் இருப்பு நிலையை'