பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் Al எடுத்துக் காட்டும் உண்மை உரை இது. இந்நிலையைக் காட்டத் தூண்டியது இன்றைய வாழ்வில் கவிஞர் கண்ட "இருள் நிலை’. புத்த மணம் பழைய கதைக் கருக்களையோ சூழலையோ முற்றிலும் கவிஞர் புறக்கணிக்கவில்லை. அத்தகைய சூழலில் புகும் போது அவருடைய பரந்த உலகியல் பட்டறிவு மேலோங்கி நிற்கிறது. பல நாடுகள் கற்றி வந்த விரிந்த மனக்காட்சி வெளிப்படுகிறது. இந்திய இலக்கியங்களில் வளர்ந்து வந்த வளர்ச்சி நிலை புலப்படுகிறது. இந்திய வைதீகச் சூழலுக்கு எதிர்ச் சூழலாக எழுந்தது புத்த மதம். அதன் கொள்கை ஒளியில் தமிழிலக்கியம் படைத்துத் தந்தது மணிமேகலை. அதன் பின்னர் புத்த மதம் தமிழிலக்கிய வளர்ச்சியில் தன் ஆற்றலை மிகுதியும் செலுத்தவில்லை. சமணம் பரவிய வேகம் புத்தத்திற்கு எதிராக அமைந்தது. வைதீகமும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இந்நிலையில் தமிழில் புத்த மணம் வீசுதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருபதாம் நூற்ருண்டில் வங்க இலக்கிய வளர்ச்சியில் விவேகானந்தர் உரையும் தாகூரின் கவிதை ஒளியும் கலந்து தமிழகத்தில் பரவத் தொடங்கின. புத்தர் ஆசிய ஜோதி” யாக மொழி பெயர்ப்பு வடிவில் சின்னஞ்சிறு வடிவந்தாங்கிக் கவிமணி’க் குரலாய் ஒலித்தது. அண்டைய மலையாள இலக்கியத்தில் "ஆசான்' பாக்களில் 'கருணு' வாக அது கலந்து மணந்தது. தமிழ்ச் சீர்திருத்த இயக்கத்திலும் புத்தரின் அறிவும் இரக்கமும் போற்றப் பெற்றன. எனினும் இப்புத்த حساسC