பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 நாச்சியப்பன் வெள்ளம் போதிய அளவு தமிழ்க் கவிதையில் செல்வாக்குப் பெற்றது எனக் கூற இயலவில்லை. எனினும் கவிஞர் நாச்சியப்பன் பாடல்களில் இச்செல் வாக்கு இளவேனிலாய் மறு வடிவம் எடுத்திருப்பதை உணரமுடிகிறது. பண்பின் பரிசு’ என அது முதலில் வெளிப் படுகிறது. கங்கைக் கரையிலே இந்நிகழ்ச்சி உருப்பெறு கிறது. நீரிலே அடித்துச் செல்லப் பெற்ற உயர்குல மங்கையைப் புலையன் காப்பாற்றினன். உயிர் காப்பதை விடச் சாதியின் வேலியே பெரியதெனப் போற்றப் பெற்றுச் சேரிக்குத் தீ வைக்கிறது பழமை. ஆத்திரம் பொங்கும்போது அன்பை வளர்க்கத் துன்பப்பகை போக்க புத்தர் வந்து புலையனைத் தன்னோடிணைக்கும் காட்சியைக் கண்கள் குளமாகக் கருணைச்சுவை வடிந்தொழுகக் காட்டுகிருர் கவிஞர். அரசியல் சட்டம் தீட்டிய அறிஞரும் செஞ்சோதிப் பெருமானின் அணைப்பிலே அடைக்கலம் புகும்போது சாதிச் சட்டம் பொசுக்கும்போது புத்த நெறியே பொன்னெறி யாகப் பொலிகிறது இக்கவிதை நெறியில். ஒருத்தி ஒருவன் மேலும் ஒருவனுக்கு இரு மகளிர் என்ற நிலை ஏற்படும் போது பின்னர் வந்தவள் அந்நிலையைப் பொருது நல்வாழ்வு காணப் புத்தமடம் ஒன்றுக்குப் போய்ச் சேர்ந்தாள் பிக்குணியாய்'(பக்86) மாறிவிடுகிருள். இவ்வாறு குடும்பத்தில் துன்பம் வீசும் போது பாதுகாப்பை நாடி நல்ல இல்லமாக அமைவது புத்த மடம் என்று புதுவழி காட்டுகிருர் கவிஞர். வங்கங் கடந்த மங்கை என்ற பகுதியில் சேய்நாட்டு மண் மிதித்த அறிவு வளமே இத்தகைய கவிதை முடிவுகளைக் காணுமாறு செய்கிறது.