பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 43 கவிஞர் பெற்ற சேய்நாட்டுச் செல்வம் இத்தகைய புதிய சூழலில் தமிழ்க் கவிதைகளே உலவ விடுவதற்கு வாய்ப் பளிக்கிறது. ~. எதிர்முனை புத்தமதத்தின் செல்வாக்குக் கொய்யாக் காதலாய் அரும்புகிறது. உபகுப்தன் கதை போல் தொடங்கிப் பின் உணர்வுக்கு அடிமையாகி உளம் வருந்தும் புத்த சீடன் கதையாகி அரசுச் சூழலில் நுழைந்து காதல் பொருமைத் தீயில் பொசுங்கி மறுபடியும் துறவுலகையே நாடுகிறது கதை. இங்ங்னம் துறவு வட்டம் உருவெடுக்கச் சுந்தரி -பெண்ணின் கொடியாளைப் படைத்துச் செல்வது, புத்த மதக் கதைகளில் காணும் 'சுஜாதை"களின் எதிர்முனை வடிவம். இதன் வளர்ச்சியில் ஆணில் கொடியவகை இளவரசி முல்லையில் காணும் பொன்னப்பனைக் கவிஞர் படைத்துள்ளார். அழகும் (சுந்தரி) செல்வமும் (பொன் னப்பன்) நிலையா என்ற புத்தரின் அறவழிக்குக் கால்கோள் கொள்வதாக இப் படைப்புகள் அமைந்துள்ளன. கவிதைப் பொன் கவிதை என்பது ஆள்வோரின் பல்லக்குத் தூக்கியாக அமைந்தது பிற்காலத்தில். தொல் பழங்காலத்தில் கவிதையின் சொல்லும் தொடரும் பழங்கால மக்களின் மனத்தில் அச்சத்தை ஊட்டும் மந்திரமாக விளங்கியது. அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களை அளிக்கும் என அஞ்சிப் புலவரைப் போற்றினர். ஆயினும் ஆட்சியாளரிள் கை வலுக்கும் போதும், வெற்றி பல மன்னரிடத்துக் குவிந்த போதும் கவிதை அவர்தம் புகழைப் பாடும் பதிற்றுப் பத்து’க்களாய் மாறிவிட்டன. எனினும் ஒரு சில கோவூர் கிழார்'கள் பொது நலம் நாடும் புலவர்