பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாச்சியப்பன் பொன்னப்பனின் நெறியோ சொன்ன சொல்லை மாற்றும் மாற்றுவாழ்க்கை கொண்ட காதலைக் கொலை செய்யும் கொடிய கத்தி! பூண்ட நட்பைப் புறக்கணித்துக் கழுத் தறுக்கும் பொங்கு தீ! இத்தகைய படைப்பைப் படைத்து அத்தீயினுள்ளே முல்லை”யையும் தாமரை'யையும் இட்டுக் கருகச்செய்வதும், "முத்’தை இட்டுப் பொரியச் செய்வதும் கவிதை உலகில் கான நிலை. அதில் வெற்றி பெற்றுள்ளது இளவரசி முல்லை’. இங்கே காணும் தலைசிறந்த உவமைகள் எளியனதாம். எனினும் அவற்றின் ஆற்றல் சொல்லற்கரியன. சூதாகக் கொலை புரிய வந்த பொன்னப்பன் கூடாரத் தில் நுழையும் செயலுக்குக் கவிஞர் நெஞ்சில் தோன்றிய உவமை இதோ: பேனென்று கூந்தலுக்குள் நுழைந்தாற் போலே பின்புறமாய்க் கூடாரத் துட்புகுந்தான் எனக் கூறும்போது திருக்குறள் ‘தலையின் இழிந்த மயிரினக் கூறிய பெற்றிமை இங்குப் புலப்படுகிறது. இவனுடைய இழி செயலால் கவிஞர் உள்ளக் கசப்பெல்லாம் திரள்வதால் ‘சுண்டெலிபோல் பின்புறமாய் நழுவிச் சென்ற காட்சியைக் காட்டும். நாளும் காணும் எளிய பொருள்கள், எனினும் படிப் போர் மனத்தில் அருவெறுப்பைப் பாய்ச்சிக் கதை மாந்தரின் உண்மை வடிவை உணர்த்துவதில் பெருவெற்றி பெறு கின்றன. அதேபோன்று முல்லை, காவியம்போல் அழகுடையாள்" எனவும் கவிஞர் காட்டத் தவறவில்லை. இவ்வாறு