பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு

1945-ஆம் ஆண்டில் நான் பாடல்கள் எழுதத் தொடங் கினேன். 35 ஆண்டுகளுக்குப் பிறகு சில பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிடும் வாய்ப்பைப் பெற்றிருக் கிறேன். இந்த வாய்ப்பும் சில அன்பர்களின் தூண்டுதலால் நானே உருவாக்கிக் கொண்ட நல்வாய்ப்பாகும். இருபது ஆண்டுகளுக்கு முன் புலவர் கவிஞர் சுற்றுலா ஒன்று மாமல்லபுரம் சென்றது. அங்கு மாமல்லபுரம் கடற் கரையில் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு பாட்டரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பாரதியார் பற்றி நான் எழுதிய சில எண்சீர்விருத்தப் பாடல் களைப் பாடினேன். தலைவர் அப்பாடல் களைப் பெரிதும் பாராட்டினர். மேலும் நான் எழுதியபாடல்களைப் படிக்க விரும்பு வதாகக் கூறினர். ஆர்வத்தோடு சில பாடல்களைத் தொகுத் தெழுதி அவரிடம் கொண்டு போய்க் காட்டிப் படித்துப் - பார்த்து ஒரு முன்னுரை வழங்குமாறு வேண்டினேன். தெம் பூட்டும்படியான பாராட்டுரை ஒன்றை மிக விரைவில் எழுதிக் கொடுத்தார். அம்முன்னுரையுடன் சில பதிப்பகத்