பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49 இவற்றுக்கிடையே மரபுக் கவிதை மலர்களும் ஆங்காங்கே பூத்து இலக்கியச் சோலையில் இனிய நறு மணத்தைப் பரப்பின. புதுமைப் பொலிவோடு நறுமணம் பரப்பும் வண்ணக் கவிதை ம ல ர் க ளி ல் கவிஞர் நாரா நாச்சியப்பனின் படைப்பிலக்கியமாகிய இந்த எண்ண மலரும் ஒன்று. கவிஞர் நாரா நாச்சியப்பன் தமிழிலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர்; காட்சிக்கு எளியர்; நிலையில் திரியாது அடங்கிய தோற்றத்தர்; ஆழ்ந்த புலமை நலம் வாய்க்கப் பெற்றவர்; அமைதி கொண்ட உருவினர். நாரா நாச்சியப்பனின் கவிதைகள் மரபு உலையில் சுவையோடும் மணத்தோடும் ஆக்கப்பெற்ற புதுமைப் பொங்கல்; வடிவால் பழமை மணமும்,பொருளால் புதுமைச் சிறப்பும் கலந்து, கற்பனைச் சிறப்புடன் இலங்கும் கருத்துக் கோவை. இந்நூலில் பன்னிரண்டு கவிதைக் கதைகள் உள்ளன; இவற்றுள் சில உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை. சொல்லழகு, பொருள் நயம், சந்தச் சிறப்பு, கற்பனைக் கவின், உவமை நலம் ஆகிய அனைத்துக் கோணங் களிலும் ஒவ்வொன்றும் மற்ருென்றை விஞ்சியுள்ளன. களவுக் காதலில் திளைத்த மணி-அமுதவல்லி என்னும் தலைமக்களின் திருமணம் காவலர் இல்லத்தில் எளியமுறை யில் நடப்பதை விளக்கும் கதைக் கவிதை "காவலர் இல்லத் தில் என்ற முதல் கவிதை. தென்றல் வரக்கண்டு தேன்கொண்ட பூவினங்கள் நின்று தலையாட்டி நீண்டசுகம் கண்டிருக்கும் வண்டுவந்து கூடி மகர யாழ் மீட்டிநின்று கொண்ட நலம்பாடிக் கொண்டிருக்கும்; பக்கத்து