பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 நாச்சியப்பன் நின்று வளர்த்துகனி நீட்டும் மரங்களிலே சென்றிருந்து பச்சைக் கிளிகள் பழம்பருப்புத் தின்று பறந்திருக்கத் தேனை நல்லிசையை வென்று குயில்பாடும் வேளையொரு சோலையிலே என நூலின் நுழைவாயில் இனிய சோலைக் காட்சியோடு நம்மை வரவேற்கின்றது. சோலையின் அழகுக் காட்சி இக் கவிதை மலர்ச் சோலையின் சிறப்பையும் கவினுறச் சித்தரிக் கும் கட்டளைக்கல்லாக விளங்குகின்றது. கவிஞரின் வண்ணனைக் கற்பனைக்கு ஒரு சான்று: அமுத வல்லியின் கண்ணிரை வண்ணிக்கும் கவிஞர் "வெட்டும் விழி யூறி வீழுங்கண் ணிரருவி பட்டிதழின் கன்னத்தில் பாய்ந்து வரக் கண்டானே’ எனப் பாடுகின்ருர். இங்கு அமுதவல்லி யின் கண்ணிர் மட்டும் பாய்ந்தோடவில்லை; கவிஞரின் கற்பனை ஊற்றும் பெருக்கெடுத்துப் பீறிட்டுப் பாய்கிறது. இக்கதையின் இறுதிக் காட்சியில் வாழை மரமின்றி, வளர்க்கும் நெருப்பின்றி, மேளமுழக்கின்றி, வேதமொழி யின்றி மணி அமுதவல்லிக்குப் பூமாலை சூடும் காட்சி கவிஞரின் சமுதாயப் புரட்சி காணும் வேட்கையை விளம்பு கின்றது. கோதையென்னும் பெயர் கொண்ட கோதையை அவள் மாமன் மகன் மாதவன், கண்ணப்பன் என்னும் கயவனிடமிருந்து காத்து மணங்கொண்ட நிகழ்ச்சியை விளக்கும் கதை வாழவைத்தான்’. பிறமொழி பேசும் போலி நாகரிக இளைஞர் சமுதாயத் துக்குக் கவிஞரின் சொற்கள் சாட்டையடியாய் விழுகின்றன. தான்பிறந்த நாட்டுத் தமிழ்மொழியில் பேசாமல் வான்வழியே வந்து குதித்திங்கு வந்தாற்போல் ஆண்டு கழிந்த அயல்நாட் டவன்மொழியில் வேண்டுமென்றே பேசித்தாம் மேன்மையுள்ளார் போல் நடித்து.