பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 நாச்சியப்பன் தார். இக் கருப்பொருளைக் கதையாகக் காட்டுகின்றது *பண்பின் பரிசு", நதியைப் பெண்ணுக உருவகிக்கும் மரபு நிலைதிரியா மாட்சியுடன் பொங்கி நுரைததும்பிப் புன்னகைசேர் மங்கையைப்போல் கங்கையெனும் தெய்வமகள்' எனக் கவிஞரின் வண்ணனை உருவகத்துடன் பண்பின் பரிசு’ தொடங்குகின்றது. காசி நகரத்து இளம் பெண்கள் குழு வொன்று கங்கையாடச் செல்கிறது. கவிஞரின் சொல்லோ வியமும் இங்குத் .ெ த ா ட ர் கிற து. மேற்குலத்தார் தம்மினத்துப் பெண் மக்கள்; தங்க நிறமுடையார்; விம்மித் திரியும் பருவத்தார்; வாழ்க்கையெனும் வையத்தடியெடுத்து வைக்காத வண்ணங்கள்; கொய்யாக் கனிகள்; குறும்பு விளையாட்டார்-கவிஞரின் வண்ணனையில் எளிமையும் இனிமையும் கண் சிமிட்டுகின்றன. "பண்பின் பரிசு கவிஞரின் உவமைப் பரிசுகளாலும் விம்மிப் பூரிக்கின்றது. செய்த குறும்புச் செயல்கள் கணக்கெடுத்தால் பெய்த மழையில் பெரிதாகும் சென்ருல் உயிர்க்கச்சம் செல்வா விடில் தலைவர் கொன்ருலும் அச்சமெனக் கோழை நடுங்குதல்போல் வந்த புலிக்கஞ்சி ஒடும் வழிப்போக்கன் சிந்தை கலங்கமலைப் பாம்பெதிரே சேருதல்போல் காலகண்டன் வந்தக்கால் கட்டிமார்க் கண்டேயன் ஒடிச் சிவலிங்கம் ஒன்றித் தழுவினுற்போல் உவமைகள் தொடர்கின்றன; அவற்றை விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும். அடுத்து வரும் கதைக் கவிதை பம்பாய்ப் பஞ்சாங்கம்’ காதலித்த பெண்ணை மணந்து, பின்ைெரு நாள் அவளைத்