பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 53 தனியே விடுத்துச் சூதாய்ப் பிரிந்தான் தலைவன். தலைவி அவனைத் தேடி இல்லம் சென்ருள். தலைவியைப் பிரியுமாறு பம்பாயிலுள்ள பஞ்சாங்கக்காரன் கூறினன் எனச் செய்தி அறிந்தாள் அவள். தோழியின் ஆலோசனைப்படி, மீண்டும் தலைவன் இல்லம் சென்று போராடி உரிமையை நிலைநிறுத்து கிருள் தலைவி. இக்கதையைக் கலிவெண்பா யாப்பில் கூறுவது "பம்பாய்ப் பஞ்சாங்கம். சமுதாயத்தில் புரையோடிய பொருளற்ற மூடப்பழக்கத்தைச் சாடும் கருப்பொருளைக் கொண்டது இக்கதை. கவிஞரின் கற்பனையில் சென்னைக் கடற்கரைக் காட்சி எண்ணப் படம் விரிக்கின்றது. சென்னைக் கடற்கரையில் சிற்றலையும் பேரலையும் ஒன்றன்பின் ஒன்ருக ஒடித் தொடர்ந்துவந்து மோதிக் கரை மணலை முத்திப் பணிந்தங்கே வேதன் அடியார்போல் வீழ்ந்து மறைந்தனவே வந்த அலைமறைய வாரி நுரையெழுப்பிப் பிந்தி வருமலையும் பின்னும் மறைந்தொழியும் ஒன்ருெழிய மற்ருென்ருே ஓங்கி உயர்ந்துவரும் வென்றெழுமுன் னலே விழுந்து கரைந்துவிடும் என இங்ங்ணம் கடலலைகளின் கவினுறு காட்சிகளைக் கவிஞர் சொற்கோலம் புனைந்து காட்டுகின்ருர். உண்மைக் கவிதைப் பெருக்கு கடலலைபோலவே ஒன்றை அடுத்து மற்ருென்ருக ஓடிவருகின்றது காதல் திருமணத்தைக் கைவிட்டுப் பஞ்சாங்க வேதத் திருமணமாய் வேருென்று செய்தற்குத் திட்டமிட்ட கண்ணன் செயல்தடுத்துத் தன்னுரிமைப் பட்டயத்தை நாட்டப் பயணம் புறப்பட்டாள்