பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 நாச்சியப்பன் தாரை அணுகி வெளியிட வேண்டியபோது, பாடல்கள் விற்பனை யாவதில்லை. கதை எழுதுங்கள் என்று கூறிவிட் டார்கள். நான் கதைகள் எழுதினேன், கைச்செலவுக்கு. பாடல்கள் எழுதினேன், மனநிறைவுக்கு. 1972-இல் இளந்தமிழன் திங்களிதழ் தொடங்கியபோது பாடலாகவே கதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கதைப் பாடல்களின் தொகுப்பே இன்று உங்கள் கையில் புத்தகமாக விரிந்துள்ளது. பாவலர் சுரதா அவர்கள் என்னைக் காணும் போதெல் லாம், நிறைய எழுதியிருக்கிறீர்கள்; சொந்த அச்சகம் வைத்திருக்கிறீர்கள் ஏன் ஒரு தொகுதிகொண்டு வரக் கூடா தென்று கேட்பார். தொகுதி கொண்டுவர இந்தத் தகுதிகள் போதுமா? நாட்டின் பகுதிகள் தோறும் மிகுதியாக விற்பனை யாகும் தகுதியல்லவா வேண்டும்? சந்தையில் விலைபோகாத சரக்கை உருவாக்குவது வாணிக முறையன்றே என்று பல காலம் வாளா விருந்தேன். நண்பர்கள் பார்வையில் மிகக் காலங் கடந்து வெளிவரும் இந்நூலினை முதலில் படித்துப் பார்த்துத் தம் ஆய்வுரைகளே வழங்கியிருப்பவர்கள் இன்று தமிழ் நாட்டின் தலைசிறந்த அறிஞர் பெருமக்களாகத் திகழ்பவர்கள். சிறந்த பாடல்களைப் படித்து மகிழ்ந்து பாராட்டிக் கூட்டங்களிலே பிறர் சுவைக்குமாறு எடுத்துச் சொல்லிச் சுவை கூட்டும் இயல்பு வாய்ந்த மாண்புமிகு நீதிபதி ச. மோகன் அவர்கள், இத்தொகுதியினை முழுக்கப் படித்துத் தம் கருத்துரையை முன்னுரையாக வழங்கியுள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ச. வே. சுப்பிரமணியம் அவர்கள், தமிழகத்துக்குப் புதுப்புது நூல்கள் வழங்குவதே தம் பணியென்று