பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல சுவை விருந்து திருமதி சு. இராசலட்சுமி இராமச்சந்திரன், எம். ஏ. எம். லிட். தமிழ்ப் பேராசிரியர், அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சென்னை-1. புதுக்கவிதை என்றதொரு புதியபாடல் பெருகிவரும் இந்நாளில் திரு நாச்சியப்பன் அவர்கள் மரபுநெறி பிறழாமல்-எதுகைமோனை தவருமல்-சீரழகு குன்ருமல் தம் கவிதைகளைப் படைத்திருப்பது பாராட்டற்குரிய தாகும். கவிதைக்குரிய நான்கு தகுதிகளும் இவர் கவிதை யில் அமைந்து விளங்குகின்றன. ஆழ்ந்த உணர்ச்சியும், அழகிய கற்பனையுமாய் வாசகர் மனத்தைக் கவர்வதோடு மட்டுமன்றி, நல்ல வடிவமும் சிறந்த பொருளும் அமையப் பெற்று வாழ்க்கையைப் பண்படுத்தும் ஒரு சிறந்த சாதன மாய் இக்கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. நல்ல தமிழ்ப்பண்பைப் பாடல்கள்தோறும் அறிவிக்கும் இவர் தன் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களையும் வைத் திருப்பது, பாடலுக்கு இனிமை சேர்க்கின்றது. இனம் பேசிக் குலம் பேசும் வழக்கொழித்து அன்புவழி காட்டும் அதிகாரியின் நல்லுள்ளத்தை முதல் கவிதை பேசு கின்றது. இக்கவிதையில் புதுமை நோக்கு காணப்படினும், நாகரிகம் என்ற போர்வையிலே இளைஞர் சமுதாயம் நெறி யின்றி நடக்கும் போக்கைக் கண்டிக்கிருர். அதுவே ‘இனியபாதி"யாக அமைந்துள்ளது.