பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 கண்ட கண்ட பெண்களெல்லாம் காதலிய ராய்க் கொண்டு வண்டு மலர்க்குமலர் தாவுதல்போல் வாழ்க்கையினைத் தாங்கள் நடத்துவதும் தையலரைத் தூற்றுவதும் ஈங்கித் தமிழகத்தில் எத்தனைநாள் செல்லும், а в e в 4 в. е в в в в .......முதலில் திருந்துவது தன்கடமை என்று தனிமனிதன் எண்ணமிட்டால் இந்தச் சமுதாயம் எப்போதோ முன்னேற்றச் சிந்து படித்திருக்கும் என இவர் தீமைகளைக் கண்டு சாடுவதைக் காண்கிருேம். சமுதாயத்தின் செல்லரித்த பகுதிகளைச் செப்பனிட்டுக் காட்டுகிருர் பண்பின் பரிசு மூலம். தீண்டாமையாகிய நச்சுப்புகை மக்களை மறைத்து மாளச் செய்வதையும், அப் புகை நீங்கிய நல்ல காற்றைப் பின் மக்கள் உயிர்மூச்சாய்க் கொள்வதையும் இக்கவிதை விளக்குகின்றது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் வேண்டும் புதுமைப் பெண் ணுக்கு எனப் "பம்பாய்ப் பஞ்சாங்கம்” காட்டுகின்றது. குடிகெடுக்கும் பெருங்குடியின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது 'ஒளி மின்னல். வாழ்வில் வளம் சேர்க்க வங்கங்கடந்த தன் காதலன்தான் வாழ்வில் தறி கெட்டுப்போனவகை கூறக்கேட்டே, தன் வாழ்வில் வளம் சேர்க்க வங்கங்கடந்த அழகம்மை கதையை அடுத்துப் பெற வைக்கின்ருர். தொழிலாளர் படும்பாட்டை எடுத்து வருணித்து 'இருளகன்றிட ஒளிபெருகிட’ வழிகளைக் காட்டுகின்றது அடுத்த கவிதை. கஜினிமுகம்மதுவின் சிறிய விளையாட்டால் உயிரிழந்த பெருங்கவிஞன் பர்தோசியின் வரலாறு கதைப்