பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரடைத் தேனின் ஒவ்வொரு துளியும் மருதூர் ச. அரங்கராசன் மருதுரர் அஞ்சல், வழி.பொன்பரப்பி, திருச்சி மாவட்டம்-621710 கதை வளம் வாய்க்கப் பெற்ற அனைவரும் கவிநலம் வாய்க்கப் பெற்றவர்களாய் இருந்துவிடுதல் இல்லை. அல்வாறேதான் கவிநலம் வாய்க்கப் பெற்றவர்களும். இரண்டனுள் ஒன்றிருந்தால் பிறிதில்லை எனுநிலையே யாங்கணுங் காணக் கிடக்கின்றது. அதனற்ருன் கதைவளம் ஒன்றே வாய்க்கப் பெற்றவர்கள் உரைநடையில் எழுது கிருர்கள்; கவிநலம் ஒன்றே வாய்க்கப் பெற்றவர்கள் பிற மொழிக் கதைகளை மொழிபெயர்க்கப் புகுதருகிரு.ர்கள். இருதிறனும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்லத் தக்கவர்களோ விரல்விட்டு எண்ணுமளவே உள்ளனர். அவர்களுள்ளும் குமுகாயம் உய்ய வேண்டும் எனும் பெரு நோக்கில் வேட்டெழுந் தெழுதுவார் ஓரிருவரே ஆவர். அவர்களுள்ளே முதன்மை இடத்தைப் பெறுகிருர் இந்நூலா சிரியரும் புலவரேறுமாய திருமலி நாரா நாச்சியப்பனர் அவர்கள். என்னே? இந்நூலுள் குமுகாய நலன் கருதாது யாண்டும் வெற்றெனத் தொடுத்திலராகலான் என்க. 'கவிஞர் எனத் தமக்குத்தாமே அறிமுகமாகும் இற்றைநாட் புலவர்கள் (?) பலர் கொச்சைச் சொற்களில் இச்சை வைத்துப் பச்சை புச்சையாய் எழுதி, பண்புடை