பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தாச்சியப்பன் சொற்கள் புலகைாமற் போகாது. இதனைத்தான் திறய்ை வாளர்கள் குறிப்புமொழி எனப் போற்றிப் புகழ்வர். காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறுக என எதிர்மறைமுகத்தான் வாழ்த்தமைத்து, கோவலன்கண்ணகி பிரிவை முன்னதாகவே உய்த்துணர வைத்த இளங்கோவடிகளுடன் புலவரேற்றை ஒப்பு நோக்கி மகிழ்கின்றனன். ஆற்ருேடு அடித்துச் செல்லவிருந்த ஒரு பார்ப்பணப் பெண்ணை, இனத்தால் இழிந்தவனென்று கற்பிக்கப்பட்ட புலையைெருவன் உயிரையுந் துச்சமென மதித்து, உடன் பாய்ந்து காப்பாற்றுகின்ருன். நன்றி கிட்டுமென நல்லமனம் நாடுகிறது; இழிகுலப் பிறவி நீ, எங்குல மடமகளைத் தொட்டனையா? பெற்றனை தண்டனை' என்று ஆர்ப்பரிக் கிறது பார்ப்பணியம். புலவரேறு குமுறுகிருர்: நால்வருண பேதமெனும் நாசமுறு குட்டையிலே காலுந் தலைமுடியுங் கட்டோடே ஊறியதால் சாத்திரமே பார்க்கும் சழக்கர்கள்; பீடற்ற ஆத்திரமே கொண்ட அறிவற்ற மூர்க்கர்கள் (பக். 45) என்றும், மூடத் தனத்தின் முழுமுண்டச் சண்டிகள் (பக். 42) என்றுஞ் சீறுகிரு.ர். சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர் என்ற அப்பரொடு புலவரேற்றை ஒப்புநோக்கி மகிழ் கின்றனன். கடிசொல் இல்லை காலத்துப் படினே என்பது தொல்காப்பியம்.