பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 நாச்சியப்பன் எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான என்று தொல்காப்பியர் கூறினராகவும், அன்ன நடையார் அலர்ஏச, ஆடவர்மேல் மன்னும் மடல்ஊரார் என்பதோர் வாசகமும் தென்உரையில் கேட்டறிவ துண்டு. அதனையாம் தெளியோம் என்று பெரிய திருமடலில் மரபைச் சுட்டி, அதனை மீறுதலையுங் குறித்த திருமங்கையாழ்வாரொடு புலவ ரேற்றை ஒப்பு நோக்கி மகிழ்கின்றனன். புலவரேற்றின் த மி ழ் ப் ப ற் று பக்கந்தோறும்அடிதோறும்-ஏன்? எழுத்துதோறும் மணக்கக் காணலாம். காட்டொன்று சுட்டுவன். தான்பிறந்த நாட்டுத் தமிழ்மொழியிற் பேசாமல் வான்வழியே வந்து குதித்திங்கு வந்தாற்போல் ஆண்டு கழிந்த அயனட் டவன்மொழியில் வேண்டுமென்றே பேசித்தாம் மேன்மையுள்ளார் போனடித்துத் தப்புச் சுதிசேர்த்துத் தாளந் தறிகெட்டுச் செப்பமில்லாப் பாப்பாடும் சீரற்ற பாடகன்போல் ஒப்பனையும் பொய்நடிப்பும் உல்லாச மாய்நினைத்துக் கற்பனையுந் தீதாய்க் கழிகின்ற பேர்வழிகள் தன்மானங் கெட்டுத்தந் தாய்நாட்டு மானமுமே என்றும் பறிபோம் இழிநிலையைச் சேர்த்துவிட்டார் (பக். 16) இதுபோலும் பகுதிகள் எண்ணில. அன்றியும், கதைமாந்தர் கட்கு அவரிட்ட மணியன், மலையப்பன், கண்ணப்பன்,வள்ளி, வஞ்சி, முத்தப்பன், பொன்னப்பன், தாமரை, முல்லைபோன்ற தூய செந்தமிழ்ப் பெயர்களை நோக்கவும் அவரது தமிழ்ப்பற்றுத் தெற்றெனப் புலனுகா நிற்கும்,