பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 67 உவம்ைகளைக் கையாள்வதிலும், க ற் ப னை க ளை நிகழ்த்துவதிலும், தங்கொள்கையினை வழாஅமல் நடாத்து வதிலும் புலவரேற்றிற்கு ஒப்பாவார் யாருமிலை என்பதினின்றே மிக்காவார் இன்மையும் இனிது பெறப் படும். ஒர் எழுத்தாளரின் படைப்புகளையெல்லாம் அவை தோன்றிய கால அடிப்படையில் வரிசைப் படுத்தில்ை முதற்படைப்பிற்கும் இறுதிப் படைப்பிற்கும் நிறைந்த வேறுபாடுகள் தோன்றும் என்றும், முதற் படைப்பிலிருந்து ஒவ்வொரு படைப்பும் படிப்படியாய்ச் செம்மையுந் தெளிவும் பெற்றுப் பொலிவுடன் வளர்ந்து வருவதைக் காண முடியும் என்றும் திறய்ைவாளர்கள் கூறுவர். ஆயின், நமது புலவரேற்றின் தொடக்க காலப் பாடல்களே செம்மையில் முழுமையும், தெளிவில் நிறைவும் பெற்று மிகுசிறப்புடன் விளங்குகின்றதாகலான் பிற்காலப் பாடல் களினின்றும் அவற்றைத் தனியே பிரித்தறியக் கூடவில்லை. வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட சூழல்களில் தோன்றிய பாடல்களாயினும் அவையனைத்தும் ஒக்கச் சிறக்கக் காணலாம். ஒரடைத் தேனின் ஒவ்வொரு துளியும் ஒத்த இனிப்பினதாய் இருப்பது போல, புலவரேற்றின் இந் நூலுள்ளும் அனைத்துப் பகுதியும் வேறுபாடின்றிச் சிறக்கக் காணலாம். இந்நூலுள் சிறந்த பகுதியென்று ஒரு சிலவற்றைத் தனியே எடுத்துச் சுட்டப் போதருதல் திருக் குறளுள்ளேயே சில குறள்களைத் தேர்ந்து சிறந்த குறள்கள் எனச் செப்பும் செயலுக்கு ஒப்பாகும். 'பாரதியின் பாடலை உணர்ச்சிக்காக ஒருமுறை படித்தேன்; கற்பனைக்காக ஒருமுறை படித்தேன்; சந்தத் திற்காக ஒருமுறை படித்தேன்; கருத்திற்காக ஒருமுறை படித்தேன்-ஒவ்வொரு முறையும் அது படித் தேளுக இனித்தது என்ருர் ஒரு திறய்ைவாளர். அது நமது