பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புலவரேற்றின் பாடல்கட்கும் பொருந்துவது கண்டு மகிழ்கின்றனன். இந்நூலுள் இளவரசி முல்லை என்னும் பாவியத்தில் “தாமரை” என்பாள் தன் காதலற்குக் கடிதமொன்றெழுது கின்ருள். அதனைக் கண்ணுற்ற காதலன் உவக்கின்ருன். எப்படி? அன்னப்பெண் தாமரையாள் எழுத்தொவ் வொன்றும் ஆயிரந்தேன் குடத்திற்கு நிகராம் என்றே (பக். 141) உவக்கின்ருன். இவ்வரிகள் நமது புலவரேற்றின் எழுத்திற்கும் பொருந்தும். தாமரையின் எழுத்துகள் அவளது காதலனுக்கு மட்டுமே உவப்பைத் தரும். ஆயின், நமது புரவரேற்றின் எழுத்துகளோ அவற்றைப் படிக்கப் புகுதருவார் அனைவர்க்கும் உவப்பை நல்கும் என்ப தொருதலை. பிறமொழிச் சொற்களையெல்லாம் அப்படியே ஆண்டும், தேவை இல்லாத இடங்களில் எல்லாம் தொடர்களைப் பிரித்து ஒன்றின் கீழ் ஒன்ருய் எழுதி, தாள்விலை அறியாது பக்கங்களைக் கொன்னே நிரப்பியும் படைப்பவர்க்கோ படிப்பவர்க்கோ புரியா நிலையில் அமைகின்ற தரந்தாழ்ந்த உரைநடையை மிகச்சிறந்த ‘வசன கவிதை எனக் கூறித் திரிபவர்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் புலவரேறு நாரா நாச்சியப்பனரின் பணி இமயமென உயர்ந்து நிற்கிறது. அன்னர் இதுபோலும் தரமான அணிகளை அடுத்தடுத்துத் தமிழன்னைக்குச் சூட்டிக் கொண்டே இருக்க வேண்டுமென விருப்புடன் வேண்டி அமைகுவன். வெல்க தமிழ் ! 1-7-1980 ச, அரங்கராசன்