பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

წე நாச்சியப்பன் வரலாற்றுக் கதை. கடல் காற்றுத் தள்ளுகின்ற கப்பல்”கள் (பக்கம் 191) நிறைந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்ட காலக் கதை! கலை கலைக்காகப் பார்வையினர், முன்னொரு காலத் தை மையமாக வைத்துப் படைக்கப்படும் கதைகளையும் கவிதைகளையும் புறக்கணிப்பர்.இன்றையநிகழ்வில்அயர்ந்து கிடக்கத் துடிப்பர்! ஆனால், பலநூறு ஆண்டுகளாக, தனக்கென ஒரு வரலாறு சமைப்பதில் தோற்றும், சரிந்தும், அயர்ந்தும் கிடக்கும் ஓரினத்தைத் தட்டி எழுப்ப அவர்தம் பழைய வரலாறு ஒரு கட்டாயக் கருவி! சப்பானியர்தம் வீர வரலாற்றிற்கும், விவேக வரலாற்றிற்கும் அவர்களுக்கு ஊட்டப்படும் சப்பானிய என்ற இனப்பெருமை ஒரு முதன்மைக் காரணம்! உலக வரலாற்றில் இரண்டு உலகப் போர்களுக்கு மூலவர்களாக இருந்த செருமானியர் வளர்ச் சிக்கும் தன்னினப் பெருமையே தலையாய காரணம்! தான் தமிழன்; தன்னினம் தமிழினம்’ என்பதை நினைவூட்ட வேண்டிய நிலையில் இருக்கும் தமிழர்க்குப் பழைய பெருமையை நினைவூட்டுவது தேவை; தவிர்க்க முடியாத் தேவை. எனவே கவிஞர், முன்னொரு காலத்தை"த் தன் காவியப் பின்னணியாகக் கொண்டமை ஒரு சமுதாயத் தேவை! கதை. மதுரை நகர் வாழ் முத்தப்பனும் பொன்னப் பனும் நண்பர்கள்! முத்தப்பன், பெண்காதல், பேதைமை என்பவன்; பொன்னப்பன், பெண் காதல் சாதனை என்பவன். பொன்னப்பன் தாமரை என்ற ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். முத்தப்பன் தன் தந்தையின் கட்டளைக் கிணங்க தஞ்சை அரண்மனை செல்ல வேண்டியுள்ளது. நண்பனை வருத்தத்துடன் பிரிகிறான். தஞ்சையில் அரண் மனையில் சீரிய பணியில் அமர்கிறான்.