பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாச்சியப்பன் 'பொன்னப்பன் இம்முடங்கல் பெற்றடைந்த பூரிப்பை இன்னதென்று விளக்கப் போமோ” (ப. 141) என்று கவிஞர் எழுதும்போது, முன்பு தோன்றிய புன் சிரிப்பு பூரிப்பாய் நம் நெஞ்சுள் நிறைகிறது. கவிதை: ஒரு கதை, கதையாக உரைக்கப்படாமல், கவிதையாகப் பாடப்படும் போது, கதை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கதை அல்லது கருவைக் கொண்டு, கவிதையை முற்றுமாக எடையிடுவது முற்றுமாகச் சரியன்று! ஒரு பாட்டு, அதன் சொற்களால், அது சொல்ல வரும் கருத்தால் மூடப்பட்டிருக்கலாம்! ஆனால் பண்ணால் அது சிறந்திருக்கலாம்! சிறந்திடும் கரு நொண்டியாக இருந்தாலும், கருவின் உருவம் அன்ன நடையிடலாம்; அன்ன நடையிடும்! இதோ பாருங்கள்: பெண்ணை வருணிக்கும் வரிகள்: "அணிகளிலும் துணிகளிலும் ஆசை வைத்தே அலைகின்ற மங்கை" (ப. 136) வான்கதிரின் அனல்மாற்றிக் குளிர வைத்த வடிவழகி" (ப. 146)

  • புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்ற வரியில் உள்ள மண்டிக் கிடக்கும்’ என்ற சொற் கூட்டத்தில் பாரதியின் பாமாண்பைக் காண்பர்; Wandering bird' என்பதில் உள்ள Wandering என்ற சொல்லில் ஆங்கிலக் கவிஞனின் மாண்பை அறிவுறுத்துவர்; "இப்படை தோற்கின் எப்படை செயிக்கும்’ என்பது மனோன்மணியச் சுந்தரம் பிள்ளையை நினைவுறுத்தும். இப்படிப் பல; பலர். கவிஞர் நாரா நா கவலையைப் பற்றி எழுதும் தொடர் இது: 'அரிக் கின்ற கவலை (ப.135) 'அரித்தல்' என்ற வினையின் அருமை யையும், கின்று’ என்ற நிகழ்கால இடைநிலையின் ஆட்சியையும் இணைத்து நினைக்கும் போது, நம் எண்ணக்கை, கவலையின் அரிப்பைச் சொறிவதற்காக ஐந்து விரல்களையும் நீட்டுகிறது.