பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


turru @36t 75 இதுபோன்றே இன்னோர் இடத்தில் அணிகளையும் துணிகளையும் தேடும் பெண்டிரை அலைகின்ற மங்கை' (ப. 135) என்று கவிஞர் குறிப்பிடும் இடம், பெண்டிர் சிலர் தம் பேதைமையைத் துல்லியமாகத் துலக்குகிறது. பனங்கள்ளை நாரா நா வருணிக்கும் முறையைப் படியுங் கள்: 'பனைக் கழுத்தில் ஊறி வரும் சாறு" (ப. 142) அரசனின் ஆணைக் கிணங்கப் புறப்படும் இளைஞர் பட்டாளத்தின் உயிர்த் துடிப்பை இரண்டே வரிகளில், "முண்டாவைத் தட்டிக் கொண்டு இளைஞர் எல்லாம் முன்னேற்றச் சிந்து இசைத்துக் குழுமலானார்" (ப. 177) என்று படைக்கிறார். முன்னேற்றச் சிந்தும் முண்டாவைத் தட்டுதலும் நம் கருத்துக் காதுகளில் எதிரொலி எழுப்பு கின்றன. - உவமை கவிஞர்களை அடையாளங் காட்டும் கருவி. எச்சில் உவமைகளை மீண்டும் மீண்டும் எடுத்து எடுத்து உமிழ்வதே பல பாவலர்தம் பொதுப்போக்கு; பொழுது போக்கு. நாராநா ஒரு புது உவமையை ஆளுகிறார். இவ் வுவமையை முதல் முதலாண்ட பெருமை நாராநாவிற்கே உண்டு! குடிலப் பொன்னப்பன், கறுப்பிருட்டில், புயங்கன் எனும் தளபதியைக் கொல்ல வேண்டும் என்ற பொல்லா நினைவுடன் பாடிவீட்டில், பூனைபோல மெல்ல மெல்ல நுழைகிறான். அவன் நுழைவு எப்படி இருக்கிறதாம். கருங் கூந்தலின் ஊடே பேன் ஒன்று நுழைந்தது போல இருக்கிற தாம். (ப. 180) உவமைகளின் கூட்டத்திற்குப் பார்க்க: (ப. 186). - வருணனை: கண்டதை, கேட்டதை அப்படியே சொற் சளில் புனைந்துரைப்பது அரிய கலை. ஆங்கிலத்தில் வேர்ட்சுவொர்த்தின் இயற்கைப் புனைவுகளை மெத்தப்