பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 நாச்சியப்பன் புகழ்வர். பிரெஞ்சு மொழியில், செனகால் கவிஞர் செங்கோர் இதில் திறம் பெற்றவர் என நுவல்வர். கவிஞர் நாராநா, தாமரை நடந்து கடந்து செல்லும் காட்டை வருணிக்கும் பகுதி இயற்கைப் புனைவின் செழுமைக்குப் பொருத்தமான காட்டு: (ப. 154 - 156) பசியால் துடிக்கும் தாமரை, மாம்பழம் பறிக்க விரும்புவதும், எட்டிப் பறிக்க உடலில் திறன் இல்லாமல் வெதும்புவதும், முடிவில் மண்ணில் விழுந்த பழம் ஒன்றை எடுத்துத் துடைத்துச் ‘சிறிது பசி தணிப்பதும், நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்! அவளுக்கு நெடுந்துாரம் நடந்து நடந்து கால் வலிக்கிறது. சரி, கொஞ்சம் அமர்ந்து களைப்பாறிப் புறப்படலாம் என்று அமர்கிறாள்; அப்போதோ மனம் வலிக்கிறதாம் (ப. 157). சொல்லாட்சி: சில பாவலர்களை அவர்தம் சொற் களாலேயே நினைவு கூர்வர்; சிலர் அவர்தம் சொல்லாட்சி யாலேயே பெயர் குறிக்கப் பெறுவர்; Beauty என்ற சொல் நினைவு வந்தால், கவி கீட்சு நினைவிற்கு வருவார்; சங்கப் புலவர்களுள் சிலர், சில சொற்களாலேயே அழைக்கப்படுவர்; 'புனையா ஒவியம்’ என்ற சொற்றொகுப்பே நக்கீரரை நினைவுறுத்தும். நாராநா, 'வழுச்சேறு" (ப. 136) என்பார், காந்தக்கண்' என்பார் (ப. 136) முன்னேற்றச் சிந்து” என்பார் (ப. 177) காதலர் தம் திருமணத்திற்கு முற்பட்ட உறவை உள்ளத்தால் மெய்யுறவு (ப. 143) என்று குறிப் பார். மெய்"யுறவு என்ற சொற்கூட்டு உடலையும் உண்மையையும் ஒருசேர உணர்த்தும் மாண்பை நினைக. சொல்லை வெட்டுதல்: பாவலன், தன் கற்பனை இறக்கைகளைச் சிந்தனைத் துடிப்பில் விரிக்க விட்டுப் பறக்கும்போது சில சொற்கள், இலக்கணச் சீர்களுக்காகத் துண்டுபடும்! காரிகை இதனை வகையுளி எனப் பெயரிடும்! யாப்புவழு என ஒதுக்கிடும்!பாவியங்களைப் படைக்கும் பல