பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 77 பாவாணர்கள், இந்த வகையுளி வழுவில் விழுவர். விதி விலக்காக இருப்பதற்குப் பெருந்திறமை வேண்டும். கவிஞனிடம் சொற்களும் இலக்கண விதிகளும் மண்டியிட்டுக் கிடத்தல்வேண்டும். கவிஞர் நாராநா, இருபாக்களில், முல்லையைப் படம் பிடிக்கிறார். ஓரிடத்தில்கூட வகையுளி யில் வீழாமல் வாழுகிறார்! நாச்சியிடம் காணத்தகும் குறிப் பிடத்தக்க சிறப்புகளுள் இதுவும் ஒன்று!! கருத்து: "நாராநாவின் இப்படைப்பில், கருத்துகள் தனி யிடம் பெற்றுள்ளன. கலை கலைக்காக என்ற முதலாளித் துவத் தத்துவத்தில் சிக்காமல், கலை சமுதாயத்திற்காக என்ற நோக்கில் அவர்தம் பாவியம் நடையிடுகிறது. சொல்லப்படும் கருத்துகள், படைப்புகளுடன் ஒன்றாமல், நீர்மேல் எண்ணெயாக மிதக்கவில்லை! அவை கதை மாந்தருடன் இழைந்து நிற்கின்றன! கருத்துகளில் முத்தப்பன் பொன்னப்பன் உரை யாடலாக அமைந்துள்ள பெண்ணைப் பற்றிய-காதலைப் பற்றிய கருத்துகள் தலைமையானவை. பெண்ணுறவு மோசம், காதல் வாழ்வு நாசம் ஆகவே அவை வேண்டாம்’ என்று முத்தப்பனும், அவையிரண்டும் வேண்டும் என்று பொன்னப்பனும் பரிமாறிக் கொள்ளுவன ஒவ்வொருவரும் படித்து முடித்து வைத்து கொள்ளத்தக்கன. இந்த எரிந்த எரியாக் கட்சிப் பட்டிமன்றைக் 'காந்தக் கண் பார்வையிலே வீழு மட்டும் காளையர்கள் பேசுகின்ற பேச்சு’’ (ப. 136) என்று பொன்னப்பன் தலைகட்டுவது சுவைக்கத் தகுந்தது. நல்ல நண்பர்களின் வாய்ச் சண்டை துணியாகி அவர் உறவைத் துணிப்பதில்லை; வாதம் முடிந்தவுடன் பிணித்து விடும் என்பதை நாராநா, நண்பர்க்குள்ளே எழுகின்ற வாய்ப்போரும் நின்று போகும்’ (ப. 138) என்பார். ஆண் பெண் காதல் மெய்யுறவை, உடல் உறவிற்குப் பின் நிலையைச் “சிறு குழந்தைத் தனமாகப் பின்பு மாறும்’ (ப. 140) என்று குறிப்பார்.