பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாச்சியப்பன் இன்றைய சமூகத்தில், முற்றி அழுகிவிட்ட முதன்மைத் தீங்கு பொய்யும் புனைவும் உரைப்பாரே வெல்வர்; மெய்யும் நேர்மையும் ஏட்டுச் சரக்குகள்! அவற்றை நம்புவோர், வெல்லார் வாழ்வில் உயரார் என்ற நினைப்பும் நடப்புமாகும்! இதனாலேயே வன்முறைகள் ஓங்குகின்றன; வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆகிறது! பலர் கூடி ஆர்ப்பரித்தால் பொய், மெய்யாக நம்பவைக்கப்படுகிறது; மெய், பொய்யாக நம்பவைக்கப்படுகிறது! இதனை நாரா, தெளிவுற, அழகுற, 'மயங்காமல் பிழை செய்து முடிப் பவர்க்கே மனக்கருத்து நிறைவேறும்” என்று சுட்டுவர் (ப. 183). அனைத்தினும் மேலாக, கவிஞர்தம் காப்பியக் கடை வெண்பா-கருத்து வெளிப்பாட்டில் அவர்தம் திறமையை யும், வெண்பாப் புனைவதில் அவருக்குள்ள ஆற்றலையும் ஒருசேர உணர்த்தும். சூதாடி வென்றவரும் சூழ்ச்சியிலே வென்றவரும் வாதாடி வென்றவரும் வாழ்ந்து சிறந்ததில்லை நல்ல மனமுடையார்; நல்ல செயலுடையார் வெல்லுவதே வைய விதி! (ப. 191) முடிவாக, இப்பாவியத்தில் கதை என்ன? பாவியக் கதை நிகழ் காலம் எப்பொழுது? பாவியக்கதை உணர்த்தும் கருத்து எது? இவையனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டன! விடை எளிதில் பெறமுடியா ஒரே வினா? இப்பாவியத்தின் தலைமை யாருக்கு? முல்லைக்கா? தாமரைக்கா?