பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 79 பாவியப் பாக்கள் மொத்தம் இருநூறு. இவற்றுள் நூறு பாடல்கள் தாமரையையே சுற்றி வருகின்றன; ஐம்பது விழுக்காடு! கதையும் தாமரைக் காதலன் பொன்னப்பன் வழி தொடங்கி-தாமரைத் தியாகத்துடன் நிறைவுறுகிறது. முல்லை, அரசிளங்குமரி என்பதொன்றும், பொன்னப்ப னின் கட்டாயக் காதலுக்கு இசையாதிருந்தாள் என்ப தொன்றும் அவள் சிறப்புகள்! ஆனால், தாமரையோ, பொன்னப்பனைக் காதலித் தமை, அதற்காக வீடு துறந்தமை, காதலனைத் தேடிப்புறப்பட்டமை, கடுங்காட்டில் அல்லலுற்றமை, மாறுவேடம் பூண்டமை, அந்தப்புரம் நுழைந்தமை, முல்லையைச் சந்தித்தமை, காதலனின் துரோகம் அறிந் தமை, முல்லைக்கும் முத்தப்பனுக்கும் வாழ்வு தர முடிவு செய்தமை, முத்தப்பனைத் தேடிக் கொணர்ந்தமை, முல்லையையும் முத்தப்பனையும் ஒன்று சேர்த்தமை, முடிவாகத் தன் காதல் வ ா ழ் ைவ நேர்மைக் கடைப் பிடிப்பால் தியாகம் செய்தமை ஆகிய நிகழ்வுகள் தாமரையைத் தலைமை நிலைக்கு ஏத்துகின்றன! எனவே அரசிளங்குமரி என்ற சிறப்பால் பாவியத் தலைமை முல்லைக்குப் போயினும், செயலால், பாவியத் தலைமை தாமரைக்கே சென்று சேருகிறது! காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையை விட்டுப் பிரியும் கடாரக் கப்பலில், முல்லையும் முத்தப்பனும் இணைந்து தப்பும்போது, கடற்கரை மணல்வெளியில் நின்று கொண்டு, ஒரு கை, அவர்களை வழியனுப்புகிறது! அந்தக் கை தாமரையினுடையது! தாமரையின் கண்மலர்களில் கண்ணிர் துளிர்க்கிறது!