உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அடையாளம் காட்டி, 'அதுதான் வழிபோ! தடையில்லை” என்றுரைத்தாள்; தன் அத்தான் காலடியில் வீழ்ந்து பணிந்து விழியிரண்டும் நீர்சொரியத் தாழ்ந்து வணங்கித் தலைநிமிர்ந்து நின்றெழுந்தாள். பொற்குணத்தான்கையிரண்டால் பூமாலேயொன்றெடுத்துச் சிற்பச் சிலையனையாள் சிவந்த திருக்கழுத்தில் சூட்டிச் சிரித்தான்; துவளும் கொடியனையாள் மீட்டும் ஒருமாலை வாங்கி மெய்யுடையான் ஏற்றத் திருக்கழுத்தில் இட்டாள்; சிரித்தாள், நற் காற்றுத் திருப்புகின்ற நாணல்போல் சூழ்ந்திருந்தார் சேர்ந்து புகழ்ந்துரைக்கச் சீர்பரவி மேளங்கள் ஆர்ந்து கலகலக்க அவ்வின்பச் செய்தியிந்த நாட்டிலெங்கும் பாய்ந்தோடி நல்லுணர்வு தான்பரப்பிப் பாட்டிலுந்தன் சீர்மணத்தல் பார்: