உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாச்சியப்பன் மூடப்பெண்கள் ஓடிவிட்டார்கள் தீட்டான கோமதியைத் தீண்டுவது பாவமென்று நீட்டினுள் அங்கொருத்தி; நேயமுள்ள தோழியரோ மூடத் தனத்தின் முழுமுண்டச் சண்டிகளாய் ஒடத் தலைப்பட்டார் ஊர்ப்புறத்தை நோக்கியே சற்றும் நினைவின்றிச் சாய்ந்து கிடக்கின்ற ஒற்றைக் கொடியாளுக் கொன்றும் உதவியின்றிக் கூடப் பழகியவக் கோதையர்கள் சட்டென்றே ஒடத் தலைப்பட்ட ஒசைகேட் டம்மனிதன் மீளத் திரும்பிவந்து மின்னுள் மயக்கநிலை போகப் பணிபுரிந்தான்; பொன்னுடலிற் சூடேறப் பூவின் விழிதிறந்து பூவுலகைப் பார்த்தமகள் சாவின் பிடிமீண்டு தண்ணிர்ச் சுழியில் நிகழ்ந்த துரைத்தவனும் நீங்கினன்; பெண்கள் இகழ்ந்தபடி சென்ற இழிநிலையைச் சிந்தித்தாள் தன்குலத்தார் என்னென்ன தண்டம் புரிவாரோ என்னே தலைவிதியென் றெண்ணிப் புலம்பிநின்ருள். ஆற்றில் விழ முடிவு செய்தாள் அணங்கு போக அடிவைப்பாள்; போனல்என் ெைமன்று நோகத் திரும்பி நுடமாவாள்; போர்க்களத்தில் சென்ருல் உயிர்க்கச்சம் செல்லா விடில் தலைவர் கொன்ருலும் அச்சமெனக் கோழை நடுங்குதல்போல், வந்த புலிக்கஞ்சி ஒடும் வழிப்போக்கன் சிந்தை கலங்கமலப் பாம்பெதிரே சேருதல்போல்,