உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - நாச்சியப்பன் மட்டாகச் சேரும் வரும்படியும் வாழ்வுதரும் விட்டுவிட வேண்டுகின்றேன் வேறு தொழில்செயலாம் என்று படபடத்தே எண்ணம் வெலவெலத்துக் குன்றுத்தோள் நாயகனைக் கோதை அழகம்மை வெப்பநீர் ஊறி விழியின் வழியொழுக ஒப்புமா றேதேதோ உள்ளங் கரைக்கின்ற நேரத்தே அங்கோர் நிழலுருவம் ஆடியதாம்! ஈரத்தைக் காற்றுக் கிரவல் கொடுத்துளத்தைப் பாலை வனத்துப் படுபாறை போலாக்கி நீலக் கடலோடி நீண்ட நெடுநாளாய்க் கப்பல் துறைமுகங்கள் காற்றுக் கடல்அலைகள் ஒப்புக்கொண் டுள்ள உயிர்நண்பராய்த்திகழும் செல்வப் பெருவணிகர் சீராளர் தன்மகனே மெல்ல அருகழைத்து மீசை துடிதுடிக்க இங்கேc பேச்சில் இருந்துவிட்டால் மாலுமிகள் சங்கூதிக் கப்பல் தனைச்செலுத்திப் போய்விடுவார் காற்றுக்குப் பாய்கட்டிக் கப்பல் புறப்படுமுன் ஏற்றிடுவாய் போய்ச்சரக்கை; இந்நேரம் அங்கிருப்பாய் என்று நினைந்திருந்தேன்; இங்கே யிருக்கின்ருய்; நின்று கதைபேசின் நேரம் கடந்துவிடும் எண்ணி முதன்முதலாய் ஏகும் பயணத்தை வண்ண முறநடத்த வாய்க்காமல் போய்விட்டால், செய்ய திருவாள் திருவருளே எய்தற்குப் பெய்தமழை நீரைப் பிரித்துவாய்க் காற்கோட்டச் சோர்ந்த உழவன் துயருழந்தாற் போலுமென்றே ஆர்ந்த பெரியோர்கள் அன்றே உரைத்துள்ளார்.