உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 73 சேர்க்கின்ற காலத்தே சேர்த்துவிடு! காலத்தே சேர்த்துவந்து கட்டி வைத்துக் கொண்டால்தான் ஞாலத்தே என்றென்றும் நம்மை மதிப்பார்கள்; தேடிப் படைக்கின்ற செல்வம் திரண்டால்தான் கூடி யிருந்துண்ணக் கூடும்; இளம்வயதில் ஒடிப் பொருள்சேர்த்தால் ஓய்ந்துவரும் காலத்தே வாடிக் கிடக்காமல் வாழ்வு சிறப்பாகும் இன்று பிரிகின்ற ஏக்கத்தை எண்ணிவிட்டால் நின்று நிலைக்கின்ற தன்மை நெகிழ்ந்துவிடும். கூடிப் பிரிவதுவும் கொண்டார் இணைந்திடலும் நீடித்த வாழ்வில் நிகழ்தல் இயல்பேயாம் அடுப்பங் கரைக்காரி ஆசைக்குட் பட்டால் இடுப்பில் வளரும் இளையவரை ஆளாக்க வேண்டாமோ தம்பி, விரைத்து புறப்படுே நீண்ட பொழுதைநீ நின்று கழிக்காதே! கண்ணிரைக் கண்டு கலக்க மடையாதே தண்ணிர் தெளித்துவிட்டால் தானே தெளியும் பொழுது கழியேல் புறப்படுவாய் என்றே அழுதாள் செவியில் அறைந்ததுபோற் கூறி அகன்ருர்; மகனும் அவர் பின் நடந்தான் பகுந்து வெடித்துலகு பாதியாய்ப் போனதுபோல் ஒன்ருய்க் கலந்த உயிர்பிரிந்து சென்றதுபோல் பின்னிப் படர்ந்தமரம் பேர்ந்து நடந்ததுபோல் உள்ளப் பசைநீங்கி ஒட்டுவிட்டுப் போனற்போல் கள்ளமிலா மங்கை கவலேத் தரைவிலே வெந்து புழுங்கிமனம் வெம்பித் தவிதவித்துச் சிந்தைதடு மாறித் திடுமென்று கீழ்ச்சாய்ந்தாள்!