84 நாச்சியப்பன் ஆயிற்றென் ருளவ் அழகு மயிலனையாள் தாயிற் சிறந்த தயையுடையாய் உன்வீட்டு வாயில் மிதித்தவளை வாட விரட்டாதே கோயில் இறைவனினும் கொண்டவரைப் போற்றும் குலத்தில் பிறந்தாள்நான் கொஞ்சுமவர் நெஞ்சு கலங்க நடந்திருப்பேன் என்ரு கருதுகின்ருய் என் கணவர் உன்கணவர் என்ருன பின்னேநான் என்னுரிமை பேசின் எரிச்சல் உனக்குவரும் ஒன்று நான் கேட்பேன் உனை நீ மறுக்காதே இன்றுமுதல் உன்வீட்டில் என்னைப் பணியாளாய் ஏற்றிடநான் வேண்டுகின்றேன் இந்த உதவிசெய்வாய் துாற்றியனுப் பாதே தொழுது வணங்குகின்றேன் நாயகர்க்கு மட்டுமல்ல; நன்றவர்தாம் போற்றுகின்ற நாயகியாள் உன்விருப்பும் நானறிந்து தொண்டுசெய்வேன் மேல்வானம் விட்டு வந்த மின்னல் கண்கலங்க நெஞ்சிளகக் காதலியாள் கட்டுரைத்த பண்பு மொழிகேட்டால் பாம்பும் மனமிரங்கும்! குன்றிக் குளறுமொழிக் கூற்றுக்குச் சாத்தானும் நின்று மனமிரங்கும்! நேயத்தில் மிக்கவளாம் அந்தப் புதுமங்கை அன்பு மனமிரங்கி சிந்தித்தா ளென்ருல் சிறிதும் வியப்பில்லை. வந்து மனம்நொந்து நிற்கின்ற பாவைக்கு எந்த வழிசொல்வி எவ்வாறுதவிடவென்று அந்த எழிலரசி ஆராய்ந்து நின்றிருக்க வந்து நுழைந்தான் வரலாற்று நாயகனே.
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/167
தோற்றம்