உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நாச்சியப்பன் இளைஞன் அழகு மிக்குடையான் இவனைச் சேர்தல் எங்ங்னமே? விழைவு,பொருளாய் இதுவரையில் வீணே கழித்தேன் நாளெல்லாம் அழகின் தேவன் ஐயனிவன் ஆசைப் படுமோர் விதங்கண்டு பழகிக் காதல் பெறுவேனேல் பயன் இப் பிறவி என்றுரைத்தாள். புத்த சமயம் சேர்ந்தவர்கள் பொன்னே பெண்ணுே வேண்டார்கள் சித்தங் கல்லாய்ச் செய்தவரே சேர்தற் கேலும் சமயத்தில், உத்தம னென்று பேர்பெற்ருல் ஊர்கள் சுற்றிக் கொள்கையினைப் புத்தம் பரவப் பரப்பிவரப் போக்குவ ரென்ருள் ஒருதோழி. சுந்தரி கேட்டுச் சோர்வெய்தித் துடித்தெ ழுந்தே பின்சொல்வாள் என்றன் தோழி மறுக்காதே! இளைஞன் சென்று தங்குனிழல் எந்த இடமென் றறிந்துவந்தே எனக்குச் சொல்வாய்! இரவின் முன் அந்தர மாகச் சென்றவனை யானுங் காண வேண்டுமென்ருள். இன்பம் ஒன்றே இத்தனை நாள் எய்தி யிருந்த நீ இனிமேல் துன்பம் கொள்ளச் செய்வதற்கே துணையாய் அழகைக் கொண்டுள்ளான்