H 26 நாச்சியப்பன் இல்லறத்தைப் பற்றியொரு கனவுங் காணு இயல்புடையார்க் குத்துன்பம் என்றும் இல்லை நல்லறத்தைச் செய்து, புத்தம் நாளும் வாழ நல்வாழ்வைத் துறந்தவரை நாளுங் காப்பாய்! வாழ்வுநலம் சுவைப்பவர்கட் கில்ல றந்தான் வழியாகும் அந்நலத்தைத் துறப்போ ரெல்லாம் யாழ்தழுவிக் கைவலிக்க அருகில் உள்ளோர்க்(கு) அஞ்சுவைத்தீம் பாடலினை ஈவோன் போல்வர்! வாழ்வுநலம் துறந்தவர்கள் மக்கள் வாழ வழிவகுத்துக் கொடுத்திடநல் வசதி யுண்டு வாழ்வு நலம் சுவைப்பவர்கள் செய்யும் நன்மை மற்றவர்க்குச் சூழ்ச்சிஎனத் தோன்ற லுண்டே! கன்னிதனை நீகான திருந்தி ருந்தால் கடுகளவும் காதல்நினை வற்றி ருந்தால் இன்னும்பத் தாண்டு துற விருந்தி ருத்தால் எவரையுமே காதலிக்க மாட்டாய். இந்தச் சின்ன இளம் வயதினிலே கண்ட தாலே சேயிழையை நீபெரிதும் நச்சி விட்டாய் என்னையுன்றன் குருவாகக் கொண்ட தாலே இன்பமுற வாழ்கவென வாழ்த்து கின்றேன்.” இப்படியோர் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு 'இனிநீபோய் மன்னவனைப் பார்த்து மக்கள் எப்படித்தம் உடையணிவார் என்ற றிந்தே இசையுநல்ல வகைத்துணியில் உடுத்திக் கொண்டு அப்படியே கன்னிதனைத் தேடிச் சேர்ந்தே அன்புடனே இல்லறத்தைத் தொடங்காய்” என்று செப்பிடவும் மற்றுமொரு முறைவ ணங்கிச் சென்ருன் அந் நாட்டரசன் தன்னைக் காண!
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/209
தோற்றம்