பாடல்கள் i43 ஒத்தவயதுள்ளவர்கள் கண்ணுல் பேசி உள்ளத்தால் மெய்யுறவு கொண்ட பின்னே இத்தரையில் துணைவர்களாய் இல்ல றத்தை ஏற்கஎண்ணி முயலுவதே துய காதல்! அத்தகைய காதலிலே சிக்கிக் கொண்டால் அன்புடைய பெற்ருேர்கள் விருப்பத் திற்கே ஒத்துவர முடியாமல் வீட்டை விட்டும் உயிரிருக்கும் கூட்டைவிட்டும் ஒட லுண்டாம்! மாலையிலே சந்திக்க வருக வென்று மலர்க் கொடியாள் தாமரையாள் அழைத்த வண்ணம் சோலையிலே பொன்னப்பன் காத்தி ருந்தான் சொன்னபடி புன்னகையோ டவளும் வந்தாள்! காலையிலே அவள்கடிதம் பெற்ற வாறும் கணக்காகத் தந்தையிடம் சொன்ன பொய்யும் ஒலையினல் தஞ்சைக்குச் செல்லத் தந்தை உடனிட்ட கட்டளையும் கூறி நின்முன். எப்போதும் இதயத்தில் வீற்றி ருக்கும் இடையழகி தாமரையைப் பிரிந்து போய்நான் எப்படி நான் நாட்கழிப்பேன் என்று நெஞ்சில் ஏதேதோ பொன்னப்பன் நினைத்தி ருந்தான் கப்பென்று சூழ்ந்த இருள் போலே அந்தக் காரிகையின் மனத்தினிலே துன்பம் ஏற "எப்பொழுது திரும்பிடுவீர்?’ என்று கேட்டாள் ஏகுவதைத் தடுக்கமுடி யாமை யாலே! தஞ்சைக்குச் சென்றங்கே நண்ப ரோடு தங்குவதால் என மறந்து போகக் கூடும்; நெஞ்சுக்குப் புதுநினைவு தோன்றத் தோன்ற நேற்றெண்ணிக் கொண்டதெலாம் மறந்து போகும்;
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/226
தோற்றம்