உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 166 நாச்சியப்பன் பத்தியுடன் தெய்வமென வணங்கு கின்றேன்; பரிந்தருள்வாய் இரவலன்போல் வேண்டு கின்றேன் இத்தனைநாள் என்மேல்நீ கொண்ட சீற்றம் இனிவேண்டாம்; கனிவாகப் பேசு, கென்ருன். முல்லைக்குச் சினம்பொங்கி வழிந்த தங்கே; முகமெல்லாம் அனலாகிச் சிவந்த தங்கே! எல்லைக்கு மேல்மீறி விட்டா யென்றே எடுத்தெறிந்து கடுமொழிகள் பேச லுற்ருள்! தொல்லைக்கு வந்தவனைத் தோழிப் பெண்கள் துரத்துதற்கு நெருங்கிவந்தார்; குறிப்பு ணர்ந்தே சல்லிக்குச் சிறுத்தவனும் அகன்று போனுன் 'சனியனிது பெருந்தொல்லை” என்ருள் முல்லை. அம்மம்மா மன்னரிடம் சொல்லி இந்த அற்பனைநாம் விரட்டிடுவோம் என்ருெருத்தி விம்முகின்ற முல்லையிடம் சொன்னுள். இன்று வேண்டாம்நாம் பின்ஞெருநாள் பார்த்துக் செம்மைமிகு முத்தப்பர் தம்மை இந்தச் (கொள்வோம் சிறுநரியான் பிரித்ததைநாம் உணர்வோம்; மேலும் வெம்மைமிகு தீங்கிழைக்கக் கூடும்; அத்தை விலக்கத்தான் பொறுத்துள்ளோம் என்ருள் முல்லை. நடந்ததெலாம் பார்த்திருந்த தாம ரைக்கு நடுங்கியது பூநெஞ்சம். தன்மேற் காதல் கிடந்ததெலாம் பொன்னப்பன் நடிப்புத் தான கீழ்த்தரமாய் நண்பர்க்கும் தீங்கு செய்தான். உடைந்திருக்கும் உள்ளத்தாள் முல்லைக் கிங்கே ஓயாத தொல்லையென வாழு கின்ருன். அடைந்திருக்கும் அதிகார வாய்ப்பால் மிக்க அவலத்தை வளர்க்கின்ருன் என்ற றிந்தே!