168 நாச்சியப்பன் அத்தறுத்துப் பெண்கள்புறம் நுழைந்த நீயார்? அப்படியேன் திரைப்புறத்தில் மறைந்திருந்தாய்? எத்துக்கு நீயுள்வு காண வந்தாய்? ப்போதே உண்மையுரைத் திடுவாய் என்ருள். மன்னவர்டால் மணப்பொருள்கள் விற்க வந்தேன் மற்றிங்கோர் அதிகாரி தன்னைக் கண்டேன் அன்னவர்க்குக் கத்துாரி தந்தேன்; பெற்ற அவர்விலையைக் கொடுக்காமல் விரைந்து வந்தார் பின்தொடர்ந்தேன்; இதுபெண்கள் பக்கம்; போதல் பிழையென்று வாயிலிலே நின்று விட்டேன்; வன்பிழையைச் செய்வதெனில் உட்புறத்தே வந்திருப்பேன்; புறத்தேநின் றிருக்க மாட்டேன். தாமரையாள் சொன்னபதில் கேட்டு முல்லை தவறில்லை இவள் பேச்சில் விடுக வென்றே பூமனத்துச் சினம்விடுத்தோர் ஆணை யிட்டாள்! பூங்கொடியர் கட்டவிழ்த்து விட்டுவிட்டார்! போம் வழியைத் தேடாமல் தன்னைப் பார்த்துப் பூத்த விழி கண்டஇள வரசி சொன்னுள். ஆமிவனை மன்னவர் பால் அழைத்துச் சென்மின் யாதேனும் பொருள்விற்றுச் செல்ல வென்முள். இளங்கொடியிர் அன்புக்கு நன்றி என்றே இசைத்தபடி தாமரையாள் நின்று கொண்டே, வளங்கொண்ட மனங்கொண்டீர், ஒரு விண்ணப்பம்; வாஞ்சையுடன் சிலசொற்கள் தனித்துப் பேச உளங் கொண்டேன்; அருள்புரிய வேண்டுகின்றேன்; உண்மைசில உணர்த்துகின்ற விருப்புக்கொண்டேன்; களங்கமின்றி என்சொல்லைக் கேட்பீர் என்றே கனிவோடு பணிவோடு கேட்டுக் கொண்டாள்!
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/251
தோற்றம்