உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206. நாச்சியப்பன் போய்விடுமோ உயிரென்று தமிழரெலாம் ஏங்குகின்ற போதில் நாட்டின் தாய்போன்ருன் தந்தைதனை விடுதலைசெய் தரசியலார் தமிழர்க் கீந்தார்! நோயோடு வெளிவந்தார் விரைவில்தன் வலிகுறைத்த நோய்பறக்க ஓயாமல் உழைத்திட்டார்! ஊரெல்லாம் தன்கொள்கை உரைத்து வந்தார்! தீயாரின் அரசியலை மதமாயை தனையொழிக்கத் திட்டம் சொன்னர்! பாயாத புதுவெள்ளம், பரவாத பெருநெருப்புப் பார்த்த துண்டோ? சொல்லின் செல்வர் பெரியார்தம் சொற்பொழிவைக் கேட்டவர்கள் வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக் குரியாராய் மாறுவதாம் விந்தையிதன் உட்பொருளைச் சொல்வேன், கல்வி தெரியாத மக்களையும் வசப்படுத்தும் முறைமைதனில் திறமை யாக உரைபகர்வார்! தன்னுளத்துப் பட்டதெலாம் ஒளியாமல் உரைப்பார் கண்டீர்! காற்றடிக்கும்! புயல் வீசும்! இடையின்றி மழைபொழியும்! கருத்து, வெள்ளம் போற் பெருகும்! அருவிஎன ஒடிவிவரும்! மணிக்கணக்காய்ப் பொழியும் பேச்சில், ஆர்த்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட பழமொழிகள் அத்த னையும்! சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச் செயல்காட்டிச் சோர்வ கற்றும்!