உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 பாடல்கள் 26 தன்னுறுதி யில்லாதான் தான் தெய்வம் போற்றிடுவான் தன்னுறுதி யில்லாதான் தான் பிறரின்-இன்துணையே நாடிப் பொறுத்திருப்பான் நாள்தோறும் வாழ்க்கையிலே வாடிப் புழுங்கி மனம். 27 பேச்சு வழக்கற்றுப் பெருமொழிதான் ம்ாய்ந்துவிடின் வாய்ச்சரக்குக் கட்டிப் பயனில்லை-ஒய்ச்சலின்றிக் கற்றதனை வாழ்நாள் கழிப்பதினும் சொல்வழக்கின் தற்பேச்சொன் ருய்தல் நலம். 28 நெய்வார்த்துப் பால்வார்த்து நீராட்டிக் கல்லுக்குப் பொய்வணக்கம் செய்கின்ற பொல்லாத-வையகமே ஏழைதுயர் பாரா திருக்கும் வரையறிஞர் பாழென் றுரைப்பர் பழி. 29 நினைத்த முடிக்குமொரு நெஞ்சுடையான் நேர்மை அனைத்துலகும் ஆட்கொள்ளும்.-ஆண்மை-எனும்வீறும் அன்னனின் உள்ளத் தடங்கியதே யன்றிவே றென்னுற்ற லார்க்கு மிலே. 30 அஞ்சாத உள்ளத்தில் வீரம் அணேந்தாற் பின் கொஞ்சாதோ ஆற்றல் குவலயத்தில்-எஞ்ஞான்றும் ஆற்றலோ டச்சம் அனேந்திரண்டுஞ் சேர்ந்தவுளம் மாற்றரிய நஞ்சாய் விடும்.