239 பல்விதக் கற்பனை பாய்ச்சும் கலைமகள்: வில் அவள் புருவம்! விரிகடல் அவள்விழி! சொல்லெழுங் குரலோ சுண்டிய திருயாழ்! பருவங் கொண்ட பச்சைப் பசுங்கொடி உருவோ பொன்மகள் உருவம் பார்த்தவர் பார்த்த அளவால் பாசக் கயிற்ருல் ஈர்த்த பாவைபோல் இயக்கம் ஒருவழி நிகழச் செய்யும் நேரிழை! இன்பம் திகழச் செய்யும் செம்மை நலத்தாள்! அழகுப் பெட்டகம்! அறிவுப் புத்தகம்! பழகும் அன்புப் படிப்பகம்! இன்பத் தமிழின் கல்விக் கூடம்! இசைமணம் கமழும் பயிற்சிக் கழகம்! நடன சாலை! முத்தமிழ்ச் சோலை! வண்ணச் சீலை ஒவியம்! சிற்ப காவியம்! . அத்தனே அழகும் அமைந்த பொற்சிலே! முத்து நகைபொழி முல்லை மலர்க்கொடி! சொல்லிய இத்தனை சுவைப்பெட் டகத்தாள் கல்லூரி யிற்பயில் கன்னிப்பெண்ணும் நன்னூல் தொல்காப் பியமென நவிலும் தொன்னுால் பயின்ற சுடரொளி பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் மயக்கம் ஒட்டும் வகையில் ஒதிச் சிறந்தவள் வாழ்க்கை நெறியை வகுக்கும் பதினெண் கீழ்க்கணக் கியாவும் தெளிந்து தேர்ந்தாள் புவிநூல் அரசியல் பொருனுால் கணிதம் கவிநூல் புதுவிஞ் ஞானக் கோவை யாவும் பயின்ற அறிவுக் கோயில்! வாவும் எழுபரித் தேரில் வருவோன்.
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/320
தோற்றம்