உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நாச்சியப்பன் முதுகு தேய்ப்பாள் முன்னவர் குளித்தபின் புதுமணம் கமழும் நுரையல் தேய்த்து மேனி குளித்து முகத்து மஞ்சள் பூசிக் கழுவிப் புத்துடை மாற்றிக் கூந்தல் அழகு கொள்ளச் சீவிச் சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். கெஞ்சு முகத்தொடு வந்ததங் கைக்குக் கொஞ்சிப் பேசிக் கூந்தல் பின்னித் தொங்க விட்டுப் பூவைத் தொடுத்துத் தங்கச் சிலைபோல் காட்சி தந்திடும் தங்கை யழகில் தனை மறந் தாளே! அடுக்களை அழைப்பினை அமுத வல்லியாள் விடுத்தனள் அனைவரும் விரைந்துசென் ருரே! தத்தம் வட்டிலைக் கழுவிக் கொண்டு சத்த மின்றி வரிசையாய்க் குந்தி இருக்கும் மக்கட்கு இட்டிலி வைத்தாள் வறுத்து அரைத்த தேங்காய்த் துவையல் தொட்டுக் கொள்ள வைத்தாள் அன்னை பிட்டுந் தொட்டும் உண்டனர் பிள்ளைகள்! குவளைப் பாலைக் குடித்து விட்டுத் தவளை போலத் தத்திச் சென்று புத்தகம் எடுத்தான் பொடியன் ஒருவன். பச்சைக் குதிரை பாய்வது போல மிச்ச மிருந்தவன் மேவிச் சென்று தன்பைக் கட்டைத் தாங்கிக் கொண்டான். பின்னல் மலர்கள் குலுங்கக் குலுங்கச் சின்ன மான்போல் தேன்மொழித் தங்கையாள் துள்ளிச் சென்றுதன் புத்தக மெல்லாம் அள்ளிக் கொண்டபின் பள்ளிக் கேகிள்ை!