குறிப்புகள் காவலர் இல்லத்தில் இளந்தமிழன் 1972 அக்டோபர் இதழில் வெளிவந்தது. இது ஒர் உண்மை நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்குமுன் செய்தி இதழ்களில் வந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பா வடிவங் கொடுத்து இயற்றியது. ஊரும் பெயர்களும் உண்மையல்ல; மாறியுள. வாழ வைத்தான் இளந்தமிழன் 1972 நவம்பர் இதழில் வெளிவந்தது. இது ஒரு கற்பனைக் கதை. தன் காமப் பசிக்குப் பெண்கள் பயன்பட்டால் போதும் என்று நினைக்கின்ற பொறுப்பற்ற ஒருவன் கதை. கதை கற்பனையே ஆனலும் நாட்டு நடப்பில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். இனிய பாதி இளந்தமிழன் 1972 டிசம்பர் இதழில் வெளிவந்தது. காதல் என்ற பெயரால் இளம்பெண்களின் நலம் உண்ண விழைந்த ஒருவன் கதை இது. தன் மனைவி இருக்கும் போதே, இளம் பெண் ஒருத்தியைச் சுற்றி வந்து கெடுக்க நினைத்தவன் கதை இது. பண் பின் பரிசு இளந்தமிழன் 1973 ஏப்பிரல் இதழில் வெளிவந்தது. இது கற்பனை கலந்த உண்மைக் கதை. - ஆற்றேடு அடித்
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/326
தோற்றம்