உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நாச்சியப்பன் முன்னுரை கவிஞர் தாரா நாச்சியப்பன் சிறந்த கவிதையுள்ளம் படைத்தவர் : தமிழன்; தனித்தமிழில், தூய இயற்கை வனப்புடன் காதலின் கொய்யாத் தன்மையைச் சித்திரிக்கும் முறை இப்படித்தான் அமையும்; கவிதைநலங் கொண்டு விளையாடுகின்ற சொற்கள் சிறைவிரித்துப் பறந்து வரும் போது, எங்கிருந்து இவை உதயமாகின்றன என்று கவனித் தால், கவிஞன் உள்ளம்தான் காரணமாகத் தோன்றும் காதலும் கவிதையும் பின்னிக்கொண்டும் மின்னிக்கொண் டும் வரும் போது, மனித வாழ்க்கை காதலைச் சுற்றி வளர் கின்ற ஓவிய வில்லங்கமும் நன்கு புலளுகிறதல்லவா? படித் துப் படித்து இன்புறுவீர்களாக!-இது புதிய இனிய இதய வனப்பு வாய்ந்த காதற் கவிதை! காரைக்குடி o - 蟲 e 4–4–48 வி. ஆர்எம். செட்டியார் என் செயல் பாடல்களால் ஒரு கதை யாக்க விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் கொய்யாக் காதல்’ எனும் சிறு காவியம். மதவெறி எத்தனை தீயது என்பதைத்தான் கதையில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். கதையை வளர்ப்பதற்குத் துணையாகக் காதற் பொருமையால் ஏற்படும் நிகழ்ச்சிகளைச் சித்திரித்திருக்கிறேன். இது என் செயல்' என்று கூறிக் கொள்வதிலேதான் நான் பெருமையடைகிறேன். பாடல்கள் எழுதுவதற்குத் தெய்வத்தின் அருளோ, கலைவாணியின் வரமோ இருக்கவேண்டும் எனப் பலர் நினைக்