பக்கம்:நாடகக் கலை 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ుuఈ ఉ&ు 10? அதைத் தெரிந்துகொள்ள அறிவுக் கண் வேண்டும். அந்தக் கண்ணேப் பெற்றவன்தான் நாடகாசிரியன். உங்கள் மனத்தையும் என் மனத்தையும் அவன் அறிவுக் கண்களால் ஊடுருவிப் பார்த்து விடுகிருன். சாதாரண மனிதனு அவன்? இல்லை, இல்லை! 'ஐயப் படாஅது அகத்த துணர்வாகனத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.’ திருவள்ளுவரே. கூறிவிட்டார், அவன் தெய்வத்திற்கு ஒப்பானவன் என்று. அதற்குமேல் தீர்ப்பேது? காடகாசிரியன் யார்? கல்லவனும் கெட்டவனும் சேர்ந்து வாழும் உலகம் இது. கல்லவன் யார், கெட்டவன் யார், என்பதை நீங்களும் நானும் தெரிந்து கொள்வது எப்படி? அந்தப் புண்ணியத்தைத்தான் செய்கிருன் நாடகாசிரியன். நல்லவன் கெட்டவன் எல்லோருடைய அகத்தையும் திறந்து காட்டி அவர்கள் பொய் வேடத்தைக் கிழித்துச் சக்தி சிரிக்க வைக்கிருன். எனவே, காடகாசிரியனுக்கு நடிகர்கள் பெரு மதிப்புத் தரவேண்டும். கடிக்கும்போது சந்தேகங்கள் தோன்றினுல் காடகாசிரியனைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாடகாசிரியனுடைய எண்ணப்படிதான் கடிக்க வேண்டும். கடிகனுக்குப் புதிய கற்பனைகள் ஏதாவது தோன்றக்கூடும். அதை காடகாசிரியனிடம் கூறி, இந்தக் காட்சியில் இப்படி கடிக்கலாமா? இந்தக் கட்டத்தில் இப்படிப் பேசலாமா?' என்று கேட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/102&oldid=1322643" இலிருந்து மீள்விக்கப்பட்டது