பக்கம்:நாடகக் கலை 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 107 துடித்திலன்; உயிர்ப்பு மில்லன்; இமைக்கிலன்; துள்ளிக் கண்ணிர் பொடித்திலன்; யாது மொன்றும் புகன் றிலன்; பொருமி யுள்ளம் வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்த்திலன்; வியர்த்தா னல்லன்; அடுத்துள துன்பம் யாவும் அறிந்திலர் அமர ரேயும்!” சாதாரணமாகத் துன்பத்தைக் காட்டும் எந்த மெய்ப் பாட்டுணர்ச்சியும் இராமனுக்கு ஏற்படவில்லை. சீதை வெட்டப்பட்டாளென்ற .ெ ச ய் தி யை க் கேட்டதும் இராமன் துடித்திலன்-உடம்பை அசைக்கவில்லை; உயிர்ப்பு மில்லன்-உயிர் இருப்பதாகவும் தெரியவில்லை; துள்ளிக் கண்ணிர் பொடித்திலன்-கண்ணிர் விடவு மில்லை; யாது மொன்றும் புகன் றிலன்-எதுவும் பேச வில்லை; பொருமி உள்ளம் வெடித்திலன்-துயரத்தால் மனம் பொருமி வெடித்துவிடவுமில்லை; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்-அழுது புலம்பி அடியற்ற மரம் போல் வீழ்ந்து விடவுமில்லை; வியர்த்தானல்லன்-அவனது உடம்பில் வியர்வைத் துளிகளும் தோன்றவில்லை; ஆல்ை, இராமனுக்கு அப்போது ஏற்பட்டுள்ள துன்பத்தையெல்லாம் அமரர்களும் அறியமாட்டார் கள்...என்கிருர் கம்பர். பேச்சு மூச்சற்றுத் திகைத்துச் சித்திரம்போல கின்ருன் இராமன் என்பது இங்குள்ள கடிப்புக் குறிப்பு. பிரமை பிடித்தவன்போல் சில விகாடிகள் கின்ருன் இராமன் என்பதை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறதல்லவா?...... குறள் தரும் நாடகம் திருக்குறள் காமத்துப்பால் முழுவதையும் வள்ளு வர் பெருமான் கமக்கு நாடகமாகவே தந்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/108&oldid=1322650" இலிருந்து மீள்விக்கப்பட்டது