பக்கம்:நாடகக் கலை 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம் கலை கலைக்காகவா? கலை கலைக்காகவே என்று சொல்லுபவர்கள் கம்மிடையே சிலர் இருக்கிருர்கள். கலை வாழ்க்கைக் காகவே என்று சொல்லுபவர்கள்-எண்ணுபவர்கள் பலர் இருக்கிருர்கள். கலையை ரசிப்பவர்களிடையே மட்டுமல்ல இந்த வேற்றுமை; கலையைக் கையாள் பவரிடையேயும்கூட இவ்வாறு இரண்டு வேறுபட்ட கொள்கைகள் இருந்து வருகின்றன. கல கலக்காகவே என் று கருதுபவர்கள் காட கத்தை வெறும் பொழுது போக்காகக் கருதி ரசிப்ப தோடு மன நிறைவு பெற்றுவிடுகிருர்கள். கலை வாழ்க்கைக்காகவே என எண்ணுபவர்கள் அவ்வாறு சசிப்பதில்லை. அவர்களுக்குக் கலை வாழ்க்கைக்குப் பயன் தரும் ஒன்ருக அமைய வேண்டும். பயனில்லித் கலையை அவர்கள் போற்றுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/113&oldid=1322657" இலிருந்து மீள்விக்கப்பட்டது