பக்கம்:நாடகக் கலை 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 11tr விளையும் கேடுகளை எடுத்துக் கூற வேண்டும். அத். தகைய தீயவர்களை அவர்கள் செய்யும் தீமையே அழித்துவிட வேண்டும்; தியனவற்றைத் தீச்செயல் புரிவோர் எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொன்னுலும், கல்லவர்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவதாக அமைய வேண்டும்; இதுவே அறம் என்று அழகாகக் கூறுகிருர் ஆசிரியர். இவ்வளவு விளக்கமாக நாடக இலக்கணம் கூறிய பிறகும்கூடக் கலை கலைக்காகவே' என்பதில் என்ன பொருளிருக்கிறது? காணும் கலை நாடகம் ஒரு மகத்தான சக்தி; அறிவையும் உள்ளுணர்ச்சியையும் கிளறிவிடக் கூடிய சக்தி. கண், காது, மனம் மூன்றையும் தன்பால் இழுத்து வைத்துக் கொள்ளும் ஓர் அறபுதக் கலை. காவியக் கலைகளில் காடகம், பார்க்கும் கலையாகக் கருதப் பெறுகிறது. அதனுல்தான் காடகத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர்கள், காடகம் அச்சில அழகாக வந்து விடுவ தால் மட்டுமே வளர்ந்து விடாது; அரங்கிலும் ஆடிச் சிறப்புப் பெற வேண்டும் என்கிருர்கள். காடகத்தில் இயல் இருக்கிறது; இசை இருக்கிறது. மூன்ருவதாக நடிப்பும் இருக்கிறது. இவற்றேடு கதை வேடம், காட்சிகள் அனைத்தும் ஒன்று சேரும்போது இலட்சக்கணக்கான மக்களுக்குச் சுவைதரும் ஒன்ருக. காடகம் அமைகது விடுகிறது. காம் இப்படியெல்லாம் சொல்லும்பொழுது கலை கலைக்காகவே என்று சொல்லுபவர்களுக்குக் கோபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/117&oldid=1322662" இலிருந்து மீள்விக்கப்பட்டது