பக்கம்:நாடகக் கலை 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 119 அறிவு வளர்ச்சிக் கலை நோய் கொடி எதுவும் வாராமல் உடம்பைப் பாது காப்பதற்காக நாம் உடற்பயிற்சி செய்கிருேம்; யோக ஆசனங்கள் போட்டுப் பழகுகிருேம். ஆல்ை, உடல் பயிற்சியிலும் ஆசனங்கள் போடுவதிலும் எல்லோ அருக்கும் உற்சாகம் இருப்பதில்லை அல்லவா? உடற் பயிற்சி நேரத்தில் உடம்பிற்குச் சரியில்லை' என்று எத்தனை பேர் ஓடி ஒளிகிருர்கள்! அதற்காகத்தான் பல விதமான விளையாடல்களையும் நமது பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிருர்கள். விளையாட்டு நேரம் வந்ததும் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளுகிறீர்கள்? பலீன்சடுகுடு, கொண்டி, கிளித் தட்டு முதலிய பழங்கால விளையாடல்களும் இன்று நீங்கள் விரும்பும் கிரிக்கட், ஹாக்கி, டென்னிஸ், புட்பால் முதலிய பல்வேறு விளையாடல்களும் உடல் வளர்ச்சிக்காக ஏற்பட்டவைதாம். அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களும் உண்டு. நாடகம் அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களில் ஒன்JT)!« கட்டுரை-கதை-நாடகம் "இளமையிற் கல்' என்று நமது அவ்வைப் பிராட்டி சொல்லியிருக்கிருர். இதை நாம் புத்தகத்தில் படிக் கிருேம். இதையே கருப்பொருளாக வைத்து இளமை யில் ஒழுங்காகப் படித்தல்ை கன்ருக வாழ்ந்த ஒருவனே யும், படிக்காததனுல் பெரியவனைபின் துயரமுற்ற ஒருவனையும் சேர்த்து கதையாகச் சொல்லுகிருர்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/119&oldid=1322664" இலிருந்து மீள்விக்கப்பட்டது