பக்கம்:நாடகக் கலை 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நாடகக் கலை உபயோகிக்க வேண்டும். கத்தியைவிடக் கூர்மை யானது காவு; காவிலிருந்து வரும் வார்த்தைகள் மிகுந்த ஆற்றலுடையவை; தீயினுற் சுட்ட புண் ஆறி விடும்; காவினுற் சுட்ட வடு ஆருது. கத்தி உடலை மட்டுமே புண்படுத்தும். வார்த்தைகள் உள்ளத் தைப் புண்படுத்தும். கலையின் மூலம் சொல்லப் படும் க ரு த் து க ள் உள்ளத்தைப் பண்படுத்தப் வேண்டுமே தவிரப் புண்படுத்தல் கூடாது. வாளைக் கொண்டு சாதிப்பதைவிட வார்த்தைகளைக் கொண்டு போதிப்பது மேல்.’ என்பது அறிஞர்கள் கருத்து. எனவே, நாடகத்தைக் கட்சிப் பிரசாரத்திற்காகப் பயன் படுத்தும் எவரும் கலைவழியாகிய அன்பு வழியி லேயே அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் காம் விரும்பும் மனமாற்றத்தை மக்களிடத்திலே காணமுடியும். நாடகக் கலையின் மூலம் நல்ல செயல்களைத் து.ாண்டப் பெரு முயற்சியெடுத்துக் கொள்ளவேண்டும். ஆல்ை, தீமைகளை எளிதில் விதைத்துவிடலாம். உயிரின் உற்பத்திதானே கடினம்; அழிவு வேலை செய்வ தற்குப் பெரிய கலைத்திறன் வேண்டியதில்லையல்லவா? "கலைப்பண்பு என்பது தொழிற் பயிற்சியில்ை மட்டும் ஏற்படுவதன்று; உள்ள மலர்ச்சியின் பயனுய் ஏற்படும் ஒரு கிலேயே கலைப்பண்பாகும். அங்கிலை ஆத்மிகத் தன்மை பொருந்தியது. ஐம்புல இன்ப நிலைக்கு அப்பாற்பட்டது என ஒர் அறிஞர் கூறு கின்ருர். அருளின் துணை வேண்டும். கலை அறிவினல் மட்டும் வளருவதன்று. அருளின் துணையும் வேண்டும். அறிவினுல் முயன்று, அறத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/128&oldid=1322674" இலிருந்து மீள்விக்கப்பட்டது