பக்கம்:நாடகக் கலை 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 133 ஆங்கிலப் பத்துக் கட்டளைகள்' படத்திற்குப் பிரமாத, மாக விமர்சனம் செய்து வரவேற்று வாழ்த்துக் கூறி: ஞர்களே! எனவே, புராண இதிகாசங்கள் என்பதற்காகவே காம் எந்த நாடகக் கதைகளையும் ஒதுக்க வேண்டிய தில்லை. அப்படி ஒதுக்கித் தள்ளத் தொடங்குவோ மால்ை கமக்குப் பழைய சிறப்பென்ருே, வ்ரலாற்றுப் பெருமையென்ருே சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாமற். போய்விடும் என்பதைப் பணிவோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். + காந்தியடிகளுக்கு வழிகாட்டிய நாடகம் இலட்சிய நாடகமாக காம் போற்றும்,அரிச்சந்திரன். இதிகாசக் கதைதான். அந்த அரிச்சந்திரன் நாடகம் சமுதாயத்திற்குத் தீமையையா செய்திருக்கிறது ? எண்ணிப் பாருங்கள். கருணை வள்ளலான நமது மகாத்மா காந்தியடிகள் 'அரிச்சந்திரா நாடகமே வாழ்க்கையில் சத்தியகெறிப் படி நடக்கத் தம்மைத் துாண்டியதென்று தம் சுய சரிதையாகிய சத்தியசோதனை'யிலே எழுதியிருக்கிரு.ர். அப்படியானல் அந்த இதிகாச நாடகத்தின் சிறப்புக்கு, வேறென்ன சான்று வேண்டும்? மகாத்மா காந்தியடி களுக்குச் சத்தியத்தைப் போதிக்கும் சக்தி வாய்க் திருக்கும் ஒரு கற்கலையை, நாடகக் கலையை, வெறும். பொழுது போக்கு நிகழ்ச்சியாக வளர்ப்பது காட்டுககு. கன்மை செய்வதாகுமா வென்பதை எண்ணிப் பார்க்கு, மாறு வேண்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/133&oldid=1322679" இலிருந்து மீள்விக்கப்பட்டது