பக்கம்:நாடகக் கலை 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காடகக் கரை போர் முடிந்தது; தயரதன் தெய்வ வடிவிலே வந்து திருமகனைச் சக்திக்கிருன். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்கிருன் தந்தை. தந்தையே, தங்களைக் கண்டதே போதும். இதைவிட வேறு என்ன வேண்டும்’ என்கிருன் இராமன். பின்னும் பரிவோடு: "உனக்கு வேண்டியதைக் கேள்' என்கிருன் தயரதன். இந்த இடத்திலே இராமன் வாக்கால் வெளிப்படுத்தும் சொற்கள் கம்பரை ஒரு மிகப் பெரிய நாடக ஆசிரியராக கமக்குக் காட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. பாடலைப் பாருங்கள்: "ஆயினும்உனக் கமைந்ததொன் றுரையென அடிகள், தியளென்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான் வாய்திறந்தெழுந் தார்த்தன உயிரெல்லாம் வழுத்தி!' தயரதன் அவ்வாறுகேட்டவுடனே, "தீயவளென்று கீ கைவிட்டாயே, அந்த என் தெய்வமாகிய கைகேயி யும் அவள் திருமகனும் எனக்கு மீண்டும் தாயும், தம்பியுமாகும்படியான ஒரு வரத்தைத் தரவேண்டும்’ என்று வணங்கிளுைம் இராமன். உடனே இராமனை மனிதர் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை கம்பர்; தேவர்கள் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை; உயிர்க் குலங்கள் எல்லாம் வாய் திறந்து எழுந்து ஆரவாரம் செய்ததாகச் சொல்லுகிருர். என்ன அற்புதக் காட்சி காப்பிய முழுவதும் கொடுமைக்காரியாகத் திகழ்ந்த கைகேயியை, எல்லோராலும் வெறுக்கப்பட்ட கைகேயியை, அவளால் கொடுமைக்காளான பாத்திர மாகிய இராமன் தன் திருவாயாலேயே தெய்வம் என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/136&oldid=1322682" இலிருந்து மீள்விக்கப்பட்டது