பக்கம்:நாடகக் கலை 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 139 இனி இங்கே இதிகாசங்களும் புராணங்களும் இடம் பெற இயலாது' என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண் டிருந்த நேரத்தில், இராமாயணத் திரைப்படத்தை வெற்றிப் படமாகக் கொண்டுவந்து, தமிழ் நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப் படத்தை நூற்றுக்கணக்கான காள்கள் ஒட்டிக் காட்ட முடிந்தது என்ருல், அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும் ? அரசியலிலே என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும், விஞ்ஞானம் இன்னும் எத்தனை புதுமைகளைக் கண் டாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் கிலைத்து கிற்கும் ஆற்றல் படைத்த அமர காவியங்கள் சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம் முதலி {L ഞാഖ്, மனித உள்ளங்களைப் பண்படுத்தவும் மனிதனை மனிதனுக்கித் தெய்வ நிலைக்கு உயர்த்தவும் நமது முந்தையோர் தந்து போன இந்தச் செல்வங்களுக்கு ஈடானவற்றை இனிப் படைக்க யாராலும் இயலாது. கடவுளரையும் மனிதர்களையும் கலந்து உறவாட விட்டுக் கதைகள் புனைந்து, அழியாத பேருண்மைகளை கெஞ்சத்திலே அழுத்தமாகப் பதிய வைக்கும் புராண இதிகாசக் கதைகளைக் குறைவாக மதிப்பிடுதல் கூடாது. இந்த உண்மையை மாணவர்களாகிய நீங்கள் நன்கறிந்து கொள்ளவேண்டும். ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்கவேண்டும் என அறிஞர்கள் விரும்புகிருர்கள்? இதற்கொரு விளக்கம் த ருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/139&oldid=1322685" இலிருந்து மீள்விக்கப்பட்டது